அஸ்திரம் திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :-
ஷாம், நிரா, ரஞ்சித், வெண்பா, நிழல்கள் ரவி, அருள் சங்கர், ஜீவா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்…
இயக்குனர்:- அரவிந்த் ராஐகோபால்
மியூசிக் :- சுந்தரமூர்த்தி
ஒளிப்பதிவு:-கல்யாண் வெங்கட் ராமன்
கதை. திரைக்கதை:- ஜெகன்..
எடிட்டிங் :- பூபதி
தயாரிப்பாளர்கள்:-
பெஸ்ட் மூவிஸ்.தன சண்முகமணி.
அஸ்திரம் என்றால் ஆயுதம் என்று பொருள்.

பழைய காலத்தில் ஜப்பானிய அரசர்கள் ஒருவர் தன்னிடம் செஸ் ஆடித் தோற்றவர்களை ,
தங்களைத் தாங்களே வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலை
செய்ய வைத்த கதை நிறைய சொல்லப்படுகிறது .
இந்த படத்தில் நிகழ்வில் இப்போது , பல்வேறு ஊர்களில் சில
நபர்கள் கத்தியை எடுத்து சற்றும் தயங்காமல் தன்னை தானே வயிற்றில் குத்திக்
கொண்டு, அதுவும் உடனே உயிர் போக வேண்டும் என்று தனது
சிறுநீர்ப் பையில் சரியாக குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
அவற்றில் ஒன்று கொடைக்கானல்
இன்ஸ்பெக்டர் அகிலன் பணிபுரியும் ஷாம் பிரபல காவல்
நிலையத்தில் எல்லையைச் சேர்ந்த இந்த பூங்காவில் சம்பவம் நடக்கிறது .
வேறு ஒரு விஷயத்தில் குற்றாவாளிகளால் தாக்கப்பட்டு கையில் அடிபட்டு ஓய்வில்
இருக்கும் இன்ஸ்பெக்டர் அகிலன். ஆர்வத்தோடு
அந்த வழக்கு விசாரணையை மேற்கொள்கிறார்.
அவரது மனைவி நிரா ஒரு பத்திரிக்கையாளர் . அவர்களுக்கு ஒரு
குழந்தை பிறந்து இறந்த நிலையில் அடுத்து ப்புறம் அவர்களுக்கு
குழந்தை உருவாகவில்லை.
மேற்படி வழக்கு விசாரணைக்காக அகிலனுக்கு எஸ் பி
அருள் சங்கர் யால் நியமிக்கப்படும் இளம் காவல்துறை அதிகாரி
ரஞ்சித் யின் மனைவி வெண்பாகர்ப்பிணியாக இருக்கிறார்.
அகிலனின் கல்லூரி நண்பன் ஒருவன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு அகிலனுக்கு போன் செய்து, நீங்கள் விசாரிக்கும்
அந்த தொடர் தற்கொலைகள் வழக்கு பற்றி முக்கிய க்ளூ
இருக்கிறது ” என்று சொல்லி சந்திக்க வரும் அவன் பேசப் பேச
அந்த ஜப்பானிய மன்னர் படித்த செஸ் என்ற புத்தகம் போன்ற புத்தகம் தனக்கு கிடைத்தது
அகிலனுக்கு நினைவுக்கு வருகிறது .
அந்த நேரம் கல்லூரி
நண்பனைத் தேடி ஒருவர் வருகிறார், இருவரும் அதே பாணியில் கழுத்தை
அறுத்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
உளவு போலீஸ் பார்வையில் குற்றவாளி ஆகிறார் அகிலன்.
தற்கொலை செய்து
கொள்பவர்கள் யார் ? அது ஏன்? என்பதை செஸ் புத்தகத்துக்கும் அகிலனுக்கும் என்ன
அவர்களுக்கும் என்ன உள்ள சம்மந்தம் என்பதைப் படம்.
கொடைக்கானல் பின்னணியில் ஒரு சிரத்தையான கிரைம் பட முயற்சியில்
ஜப்பானிய மன்னர் பற்றியும் சில பிளாஷ்பேக் சம்பவங்கள் பற்றியும்
சொல்லும் அனிமேசன் ஏ ஐ காட்சிகள் மிகவும் அட்டகாசமாக இருக்கின்றன .
கதையை திரைக்கதையாக வசனமாக விவரித்து எதைப் பற்றியும்
கவலைப் படாமல் நல்ல பிள்ளையாக சொல்லிக் கொண்டே போகிறார் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால்.
லோக்கேஷன்களை அழகாகப் பயன்படுத்தி தனது வேலையை
சரியாகச் செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன்.
பாடல் இசையில் செல்ஃப் எடுக்காவிட்டாலும் பின்னணி இசையில்
இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தி .
ஷாம் கதாநாயகன் கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார் . இயல்பாக நடிக்கிறார்
கதாநாயகி நிராவும் அப்படியே.
புதுமுக நடிகர் ரஞ்சித் மென்மையாக இயல்பாக நடிக்கிறார் .
குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் மனம் கவர்கிறார். வெண்பா .
ஜப்பான் அரசர் , அதை வைத்து எது அஸ்திரம் (ஆயுதம்) என்று வித்தியாசமாக சில விஷயங்கள் சொல்கிறார்கள் .
ஆனால் முதல் பாதி முடிவில் இரண்டாம் பகுதி ஒப்பன் சீக்ரெட் ஆகப் போய்விட்டது .
ஜப்பான் அரசர் கதையை முதலில் சொல்லாமல் விஷயம் வெளிப்படும் போது.
ஒரு சம்பவம் நடக்கிறது .. அதை விவரமா காட்டி . பின்னர் அது பற்றி விசாரிக்க
இன்ஸ்பெக்டர் வருகிறார் . அவரிடம் பார்த்தவர்கள் நடந்த சம்பவத்தை
விவரமா சொல்கிறார்கள் . என்ன காட்டப்பட்டதை அப்படியே சொல்கிறார்கள். எந்த
விஷயத்தை சொன்னால் தானே விசாரணைக் காட்சி தேவை. என்றால் அது எதற்கு? தெரியும்.
பூபதி சார் எடிட்டிங் ?
அதே போல இறந்து போன ஒவ்வொருவரின்
வீட்டில் விசாரிக்கும் காட்சியிலும் இன்னும் .
என்னதான் கதைக்கு நியாயம் என்றாலும், ஏதோ ஒரு நோயின் பெயரைச் சொல்லி
ஒரு சிறுவன் தன் தம்பியையும் அப்பாவையுமே கொலை செய்கிறான்.
சமூகத்தின் பிரபல நபர்களை எல்லாம் அவன் கொலை செய்கிறான் என்று சொல்லி இருந்தால்
இன்னும் நல்லாயி ருந்திருக்கும் . பல
விஷயங்களில் இன்னும் கவனம் செலுத்தி யோசித்து
அழகாக கொண்டு போய் இருந்தால்
சிறப்பான அஸ்திரம் என்ற ஆயுதமா இருந்திருக்கும் அனைவரும் ரசித்து சிந்தித்து பார்க்க
வேண்டியப்படம்…
.