‘உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் !

பிறந்த நாளில் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் !
அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்திய ரசிகர்கள் !
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்தார்.

நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார்.
அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.

நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது



