கலைஞர் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.அதன்படி தை 1 பொங்கல் நாளான செவ்வாயன்று காலை 9 :00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் இனிய இல்லறம் சிறக்க பெரிதும் துணை நிற்பது மகளிரின் மதிநுட்பமா? ஆடவரின் ஆளுமையா? என்கிற தலைப்பில் சிந்திக்க வைக்கும் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றமும், காலை 10:00 மணிக்கு சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் “டான்” திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு கமல்ஹாசன் நடிப்பில் “இந்தியன் 2” சிறப்பு திரைப்படமும், மாலை 6 மணிக்கு அஜித்குமார் நடிப்பில் “துணிவு” சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.அடுத்ததாக, திருவள்ளுவர் தினமான மாட்டுப் பொங்கலன்று காலை 9:00 மணிக்கு கற்றது சமையல் குழுவினர் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் கண்ணாடி பாலத்தில் சமைக்கும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியும், காலை 10:00 மணிக்கு சூரி, சசிகுமார் நடிப்பில் “கருடன்” திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன், இவானா நடிப்பில் “லவ் டுடே” திரைப்படமும், மாலை 6:00