கலைஞர் தொலைக்காட்சியின் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்
கலைஞர் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் ஜெய்-ன்
“குற்றம் குற்றமே”
கலைஞர் தொலைக்காட்சியில் சித்திரை திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்களும், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கிறது.


அதன்படி ஏப்ரல் 14 காலை 10.30 மணிக்கு சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், பாரதிராஜா நடிப்பில் இன்னும் திரைக்கு வராமல், நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாகும் “குற்றம் குற்றமே” புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படமும், மதியம் 1.30 மணிக்கு ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜிமோல் ஜோஸ் நடிப்பில் “ஜெய் பீம்” திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.


மேலும், சித்திரை 1 சிறப்பு நிகழ்ச்சிகளாக திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் “சிறப்பு பட்டிமன்றமும்“, நடிகர் அருண் விஜய் பங்குபெறும் “ஸ்டைலிஷ் தமிழன்” என்கிற கலகலப்பான சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி உங்களை மகிழ்விக்க இருக்கிறது.