ARM :- ஏ. ஆர். எம் என்ற மலையாளம் கதையின் தமிழ் பட சுருக்கம் திரைவிமர்சனம் …
மூன்று காலங்கள் நடந்த உண்மை நிகழ்வுகள்.இதுல நடிகர்
டொவினோ, தாமஸ் பிரமாண்ட நடிப்பில் படைப்பு…
மூன்று தலைமுறையாக வாய்மொழியாக கேரளாவில் வாழும்
நாட்டுப்புற மக்களின் கதையின் பிரதிபலிப்பை சுஜித்
நம்பியாரின் எழுத்துகளில் வடிமைத்துள்ளார்.
வானத்திலிருந்து விழுகின்ற எரிகல், சியோதி என்கிற
பொக்கிஷ விளக்காக மாறுகிறது. விலைமதிப்பற்ற அந்தப் பொருள் ஒரே
பரம்பரையைச் சேர்ந்த மூன்று நபர்களின் வாழ்வில் என்னென்ன
மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
என்பதே ஏ.ஆர்.எம்
“அஜயண்டே ரண்டாம் மோஷனம்” மலையாள மொழியின் தமிழ் தழுவல் படைப்பு
கேரளாவின் ஹரிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் அஜயன் டோவினோ தாமஸ்,
அந்த ஊரில் செல்வந்திரக் குடும்பத்தைச் சேர்ந்த
லக்ஷ்மியை கீர்த்தி ஷெட்டியை விரும்புகிறார்.
களரி, மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது என அமைதியான
வாழ்க்கையை வாழ விரும்பும் அவரை சில களங்கங்களும்
பின்தொடர்கின்றன.
ஒரு காலத்தில் கிராமத்தின் கோயிலிலிருந்த
விலையுயர்ந்த சியோதி விளக்கைத் திருடிச் சென்றது. அவரது
தாத்தா மணியன் டோவினோ தாமஸ் என்பதாலும்,
அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அஜயனைத்
திருடனாகவே பார்க்கிறது. அந்த கிராமம்.
ஊரில் சில திருட்டு சம்பவம் நடக்க
எல்லாருடைய பார்வையும் அஜயன் மீது விழுகிறது. அந்த
கோயிலைப் படமெடுக்கும் சுதேவ் ஹரீஷ் உத்தமன் இதனைத் தனக்குச்
சாதகமாகப் நல்லவே பயன்படுத்த நினைக்கிறார்.
பிறகு என்ன நடக்கிறது, யார் சுதேவ், ஸ்ரீபூதி விளக்குக்கும்
அஜயனின் குடும்பத்துக்கும். என்ன சம்பந்தம் மூன்று தலைமுறைகளின்
கதையைச் சொல்லியிருக்கிறது .
அஜயன் என மூன்று
தலைமுறை பாத்திரங்களை ஏற்றிருக்கும்
டொவினோ தாமஸ், சியோதி விளக்கின் வெளிச்சம் போல
பிரகாசித்திருக்கிறார்.
அஜயனும் மணியனும் காட்சிக்குக் காட்சி வந்தாலும் அவர்கள்
இருவருக்கும் இருக்கும் மலையள மொழியின் வித்தியாசங்களை தன்
உடல்மொழியால் சிறப்பாகக் நடித்திருக்கிறார்கள் .
டொவினா உழைப்பைக் கொடுத்து நடித்திருக்கிறார்.
மூன்று கதாபத்திரத்தில் டொவினோ, மூன்று நாயகிகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்ஷ்மி, கீர்த்தி ஷெட்டி சிறப்பாக
நடித்திருக்கிறார்கள்.
இதுல . சுரபி லக்ஷ்மிக்குக் குறைவான காட்சி
வந்தாலும் மனதில் நிற்கும்படி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கொஞ்ச காதல் காட்சியில் வந்தாலும் கீர்த்தி ஷெட்டி, காதல் வசனங்களை பேச
விட்டு டொவினாவை அதிகம் பயன்படுத்திருக்கலாம் .
கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக வரும் நிஸ்தர் சைத், பிளாக்
மெயில் செய்யும் ஹரீஷ் உத்தமன் ஆகியோர் கதாபாத்திரங்கள் சிறப்பாக இருக்கு .
பொற்கொல்லனாக வரும் நடிகர் ஜெகதீஷ் கதாபாத்திரம் எடுப்படவில்லை.
மூன்று காலக்கோடு, திரை நெடுக கலையலங்காரம், காட்சியமைப்புக்குச் சிறப்புகள்
கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான்.
இரவு நேரக்காட்சிகள் அருவிகளின் இயற்கை அழுகு க்காட்சிகளை
அற்புதமான கோணத்தில் இயக்கியிருக்கிறார்.
கோகுல் தாஸின் கலை இயக்கம் புதையல் வேட்டையின் வழித்தடத்தில் சாகசம்
இந்த சாகசத்தைச் சற்றே தெளிவாகவும் வேகமாகவும் படத்தொகுப்பாளர் ஷமீர்
முகம்மது. செய்திருக்கிறார்.
திபு நினன் தாமஸ் இசையில் ‘பூவே பூவே தாழம்பூவே’ பாடல்
இதமான காதல் ராகம் என்றால், பின்னணி இசை ஆக்ரோஷமாக
அதிர்ந்திருக்கிறது
தலைமுறை தலைமுறையாக
வாய்மொழியாக கேரளாவில் வாழும் நாட்டுப்புறக் கதைகளின்
கூறுகளைப் பிரதிபலித்திருக்கிறது. சுஜித் நம்பியாரின் எழுத்து.
அதற்குக் காட்சிக்குக் காட்சி தொழில்நுட்ப ரீதியாக நல்ல மேக்கிங்கைக் கொடுத்திருக்கிறார்
அறிமுக இயக்குநர் ஜித்தின் லால். ஆனால் அது திரைக்கதையாகக்
கோர்க்கப்பட்ட விதத்தில் சுவாரஸ்யம் மிஸ்ஸிங்.
பிரபஞ்சமே தியான சொற்பொழிவு
நடத்துவது, எரிகல் விழுந்து காடுகள் நகரமாவது, அரசனின்
ராஜதந்திரம் எனத் தொடக்கம் பவர்பிளே போலப் பிரகாசமாகத் தொடங்குகிறது.
புதையலைத் தேடிப் போகும் சாகச பயணங்களும் பல
பழைய படங்களை நினைவுபடுத்துகின்றன
இரண்டாம் பாதியில் நொடியில் முடிந்து போகின்றன.
மொத்தத்தில்
கண்களுக்கு குளிர்ச்சி தரும் ஒரு வரலாற்றுக் கதைக்கான சிறப்பான
கதைக்களம் அமைந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திரைக்கதை. தந்திருக்கிறார் இயக்குனர்