’லேபிள்’ வெப்சீரிஸை தொடர்ந்து புதிய வெப்சீரிஸில் நடிக்கும் அரிஷ் குமார்



மாத்தியோசி, கோரிப்பளையம், முத்துக்கு முத்தாக, மிக மிக அவசரம் உள்ளிட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகர் அரிஷ் குமார். சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘லேபிள்’ வெப்சீரிஸில் முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இதை தொடர்ந்து அடுத்ததாக பிரபல விநியோகஸ்தரும் இயக்குநருமான மதுராஜ் இயக்கிவரும் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார் அரிஷ் குமார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

