
அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு வெளியிட்ட, அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!

Life Cycle Creations சார்பில் தயாரிப்பாளர் பவன் K மற்றும் அஜிஸ் P ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சமூக அக்கறைமிக்க சோஷியல் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள படம் “அரிமாபட்டி சக்திவேல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை முன்னணி இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு இணைந்து வெளியிட்டுள்ளனர்.

இந்தத் திரைப்படம் திருச்சி அருகே ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமமே தங்களுக்கு என்று ஒரு கட்டுபாட்டை வரையறுத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஊரில் உள்ள ஒருவன் அந்த கட்டுப்பாட்டை மீறும்போது நாயகனுக்கும் ஊருக்கும், நடக்கும் வாழ்வியல் போராட்டங்களை மையக்கருவாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
இயக்குநர் கரு பழனியப்பன் உதவியாளராக பணியாற்றிய, ரமேஷ் கந்தசாமி இப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமாகிறார். சமூகத்தின் மறுபக்கத்தை ஏற்றத்தாழ்வுகள் மிக்க மனிதனின் முகத்தை தோலுரித்து காட்டும் படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சார்லி நடித்துள்ளார். நாயகனாக புது முகம் பவன் .K நடிக்க, நாயகியாக மலையாள நடிகை மேகனா எலேன் நடித்துள்ளார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, Super good சுப்ரமணி, கராத்தே வெங்கடேஷ், Hello கந்தசாமி, பிர்லா போஸ், அழகு, செந்தி குமாரி உட்பட மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருகிறார்கள்.
அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய, அம்பேத்கரும், பெரியாரும் இன்னும் மாறாத சமூகத்தை பரிதாபத்துடன் கவனிக்கும் குறியீடாக, சிறைக்கம்பிகளுக்கு வெளியில் நின்று, கிராமத்தின் பஞ்சாயத்தை கவனித்து பார்க்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படம் சொல்ல வரும், கருத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திவிடுகிறது. மாறுபட்ட வகையில் அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு அரியலூர் மற்றும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
தொழில் நுட்பக் குழு
இயக்கம் – ரமேஷ் கந்தசாமி
கதை & திரைக்கதை, வசனம் – பவன் .K
தயாரிப்பு – அஜிஷ் P. & பவன் K
இசை – மணி அமுதவன் (களவானி -2 )
ஒளிப்பதிவு – JP மேன்
படத்தொகுப்பு – RS. சதிஸ் குமார்
கலை இயக்குனர் – கபாலி கதிர்.K
ஆடை வடிவமைப்பு – பழனி அம்மாவாசை
நடனம் – மது
சண்டைப்பயிற்சி – பில்லா ஜெகன்
பாடல்கள் – மணி அமுதவன்
நிர்வாக தயாரிப்பு – விக்கி