ஆர் யூ ஒகே பேபி’ திரை விமர்சனம் !!

Share the post

ஆர் யூ ஒகே பேபி’ திரை விமர்சனம் !!

மங்கி கிரியேடிவ் லேப் தயாரிப்பில்
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ஆர் யூ ஒகே பேபி.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ,அபிராமி ,, , அசோக், முல்லையரசி பவல் நவநீதன், ரோபோ சங்கர், வினோதினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

வறுமை காரணமாக இந்த குழந்தையை, கேரளாவில் வாழும் குழந்தை இல்லாத பணக்கார கணவன் -மனைவிக்கு பணம் பெற்றுக்கொண்டு தத்து கொடுத்து விடுகிறார்கள்

.ஒரு வருடம் கழித்து தத்துக்கொடுத்த தாய்க்கு தன் குழந்தை மீண்டும் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறார்.

பல முயற்சிகள் செய்தும் முடியாமல் போக, பல்வேறு குடும்ப பிரச்சனைகளுக்கு தனது “சொல்லாததும் உண்மை” என்ற தொலைக்காட்சி லைவ் ஷோ மூலமாக நியாயம் வழங்கும் எ லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அணுகுகிறார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மிக எமோஷனலாக இந்த குழந்தையின் தாயை வைத்து நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார்.

ஆனால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

மாறாக காவல் துறை குழந்தை தத்து கொடுத்ததில் சட்ட மீறல் உள்ளது என்ற கோணத்தில் தத்து பெற்ற கேரள தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்து,

குழந்தையை கைப்பற்றி சென்னையில் உள்ள காப்பகத்தில் சேர்த்து விடுகிறது.

நீதிமன்றம் இந்த வழக்கை எப்படி கையாளுகிறது என்பதே இப்படத்தின் கதை .

ராமகிருஷ்ணா நடத்திய ஒரு லைவ் ஷோவை கொஞ்சம் பெயர் மாற்றி, தான் இயக்கும் படத்திலயே எந்த வித மாற்றமும் செய்து கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணா -பாராட்டுக்கள்

குடும்ப பிரச்சனைகளை வைத்து நடத்தப்படும் ஷோக்கள் அனைத்தும் மக்களை மைய்யப்படுத்தியே நடக்கின்றது என்று சொல்லி இருக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணா.

சமுத்திரக்கனி அபிராமி மிஷ்கின், முருகா ,அசோக், முல்லையரசி பவல் நவநீதன், ரோபோ சங்கர், வினோதினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அனைவரும் நடிப்பும் சிறப்பு.

இளையராஜா இசை வலிமை சேர்த்து இருக்கிறது

கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு நிறைவாக உள்ளது .

.படத்திலும் ஒரு நிஜ லைவ் ஷோ நடுத்துபவராக நடித்துள்ளார்.

மொத்தத்தில்

*உண்மை பக்கத்தை சொல்லி இருக்கிறது*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *