பாட்ஷா (ப்ளூ சட்டை மாறன்) சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார்.
சுவர் விளம்பரங்கள், ஓவியங்கள் வரைபவரான பாட்ஷா.
இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறந்த பாட்ஷாவின் உடலைப் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் எடுத்துச் செல்கின்றனர்.
பாட்ஷா உண்மையான முஸ்லிமாக வாழவில்லை என்றும், இதனால் பள்ளிவாசலில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் அங்கிருக்கும் முஸ்லிம்களில் சிலர் உடலைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
இந்து மக்களின் உடல்களை அடக்கம் செய்யும் மயான பூமிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
இறந்தவரின் பெயர் பாட்ஷா என்றிருப்பதால் சிக்கல் ஏற்படுகிறது.
அரசியல் கட்சிகள் பாட்ஷாவின் உடலை வைத்து அரசியல் செய்யகின்றன.
ப்ளூ சட்டை மாறன் முதல் படம்.
பாட்ஷாவின் மரணம், அவரது உடலை அடக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்கள், தேர்தல் நேரம் என்பதால் பிணத்தை வைத்து அரசியல் செய்ய முயலும் கட்சிகள், உடலை அடக்கம் செய்ய முன்வரும் கிறிஸ்தவ பாதிரியார், சமீபத்தில் மறைந்த ‘கில்லி’ மாறன் கருப்பு ஆங்காங்கே பேசும் நச் வசனங்கள் என முதல் பாதி போவதே தெரியவில்லை. பல காட்சிகளில் வசனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.
முதல்வராக வரும் ராதாரவி, பாட்ஷாவின் அம்மாவாக வரும் விஜயா, உதவி கமிஷனராக வரும் ‘ஆடுகளம்’ நரேன், ‘வழக்கு எண்’ முத்துராமன், ஜெயராஜ், ‘பசி’ சத்யா, சுரேஷ் சக்ரவர்த்தி, ‘குக் வித் கோமாளி’ பாலா என படத்தில் ஏகப்பட்ட சின்ன சின்ன கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைவருக்குமே சமமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அனைவருமே இயக்குநர் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
13 பேரைக் கொன்னீங்க, இப்ப உங்கக்கிட்ட 13 பிணம் கிடச்சிருக்கு, இத வச்சு என்னல்லாம் பண்ணப் போறானுங்களோ’ போன்ற வசனங்களின் மூலம் ஒரு இயக்குநராக மட்டுமின்றி வசனகர்த்தாவாகவும் முத்திரை பதித்துள்ளார் மாறன்.
ஒரு நல்ல படம் ‘ஆன்டி இண்டியன்’ .