இசை மற்றும் நடனம் இணையும் புதுமையான நிகழ்ச்சி,
புதுயுகம் தொலைக்காட்சியின் ‘ஆடவா பாடவா’
ஆடலுக்கும் பாடலுக்கும் தனித்தனியாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஆடலும் பாடலும் சேர்ந்த புதுமையான போட்டியாக ஒளிபரப்பாகிறது புதுயுகம் தொலைக்காட்சியின் ‘ஆடவா பாடவா’!
பன்முகக் கலைஞர் மோகன் வைத்யா, பாடகர் எஸ். என். சுரேந்தர், கர்நாடக இசைப் பாடகர் மற்றும் குரல் பயிற்றுநர் விஜயலக்ஷ்மி மற்றும் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்கின்றனர். வீ.ஜே ஸ்ரீ மற்றும் வீ.ஜே நந்தினி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து குவிந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பாடகர்கள் மற்றும் 32 நடனக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். குழந்தைகள், பெரியவர்கள் என வயது வரம்பின்றி அனைவரும் ஆடவா பாடவா நிகழ்ச்சியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு தகுதிச் சுற்றிலும் 4 பாடகர் மற்றும் 4 நடனக் கலைஞர்கள் தனித்தனியாக தங்களின் திறமையை வெளிப்படுத்துவர். பின்னர், ஒரு பாடகரும் ஒரு நடனக் கலைஞரும் ஜோடியாக போட்டியில் பங்கேற்பார்கள். இறுதிப் போட்டியில் வெல்லும் பாடகர் மற்றும் நடனக் கலைஞருக்கு ஆடவா பாடவா சாம்பியன் பட்டமும், ரொக்கப் பரிசும் காத்திருக்கின்றன!
இந்நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 9:00 மணிக்கு ‘ஆடவா பாடவா’ நிகழ்ச்சியை புதுயுகம் தொலைக்காட்சியில் கண்டுகளிக்கலாம்!