சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் முக்கிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதையடுத்து, மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகளை அதிகாரிகள் அதிகரித்து வருகின்றனர்.

ஏற்கனவே ராஜீவ் காந்தி மருத்துவனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரத்து 968 படுக்கை வசதிகள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக ராஜீகாந்தி மருத்துவமனையில் 550 படுக்கைகள், ஸ்டான்லி மருத்துவமனையில் 500 படுக்கைகள், ராயப்பேட்டை மருத்துவமனையில் 250 படுக்கைகள், எழும்பூர் மருத்துவமனையில் 200 படுக்கைகள் என மொத்தம் 1500 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.