“அம்புநாடு ஒம்பது குப்பம்”  திரை விமர்சனம் !!

Share the post

*“அம்புநாடு ஒம்பது குப்பம்”  திரைவிமர்சனம் !!*

.பி .ஆர் பிலிம் பூபதி கார்த்திகேயன் தயாரித்து,
ஜி. ராஜாஜி இயக்கி வெளிவந்திருக்கும் படம் அம்புநாடு ஒம்பது குப்பம்”

இப்படத்தில் சங்ககிரி மாணிக்கம்
ஹர்சிதா ஸ்ரீ
விக்ரம் சுருதே
பிரபு மாணிக்கம்
மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமம், அங்கே பல சமூக மக்கள் வாழ்கிறார்கள்,

காலகாலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து விடக்கூடாது என்கிற பிற்போக்குத்தனமான பழைமை வாத சிந்தனையை உள்வாங்கிய ஊர், சக மனிதனை  சமமாக ஜாதியின் பெயரால், தீண்டாமை,  மற்றும் அடக்கி ஒடுக்கி வைக்க வேண்டும் என்கிற அதிகார  மமதையில்  எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிற ஜாதி படிநிலையை காப்பாற்ற துடிக்கிற, அதிகாரத்தை கைப்பற்றி வைத்துக் கொள்ள வேண்டும்

ஊரை ஆள வேண்டும் என்கிற வெறியோடு இரு தரப்பு பண்ணையார்கள்,  கோவில் திருவிழா வருகிறது திருவிழாவில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கோவில் பூசாரி வைத்திருந்த தாம்பூலத்தட்டை தொட்டு விபூதி எடுத்து விடுகிறார் இதனால் அங்கு கலவரம் ஏற்படுகிறது,

பண்ணையார்கள்  தங்களுக்குள் இருக்கும் அதிகார பகயை ஒதுக்கிவைத்து விட்டு, பண்ணையார்கள் இருவரும் ஒன்று சேர்ந்து,  தாம்பூலத் தட்டை தொட்டது தீட்டாகிவிட்டது எனக் கூறி நாட்டு கூட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறார்கள் அதே பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக விடுதலைக்காக போராடக்கூடிய அரசியல் இயக்கம்  நாட்டு கூட்டத்திற்கு போகக்கூடாது சட்டப்படி பிரச்சனையை எதிர்கொள்வோம் எனக்கூறி பட்டியல் சமூக மக்கள் பக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் இதை அறிந்த பண்ணையார்கள், கட்சிக்காரரிடம் நாம் தோற்றுவிடக்கூடாது  தங்களது ஜாதி கௌரவத்திற்கு  இழிவு ஏற்பட்டுவிடும் என கருதி தாம்பூல தட்டை தொட்டு விபூதி எடுத்த இளைஞரை மர்ம கொலை செய்து விடுகிறார்கள். இப்படத்தின் கதை.

சங்ககிரி மாணிக்கம்
ஹர்சிதா ஸ்ரீ
விக்ரம் சுருதே
பிரபு மாணிக்கம்
கொடுத்த கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறார்கள்.

ஓ.மகேஷ் ஒளிப்பதிவு அருமை

ஆண்டனி தாசன் மற்றும் ஜேம்ஸ் வசந்தன் இசை படத்துக்கு பலம்

படத்தொகுப்பு பன்னீர்செல்வம் சிறப்பு.

மொத்தத்தில்

*சமுதாயத்துக்கு ஏற்ற
படம்*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *