அமரன் திரைப்பட விமர்சனம்…!!
ராஜ்கமல் பிலிம்ஸ்
இன்டர்நேஷனல் & சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரித்து
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வெளிவந்திருக்கும் படம் அமரன்
ஒளிப்பதிவு :- சி.எச். சாய்
மியூசிக் :- ஜி வி பிரகாஷ் குமார்
வசனம் எழுதியவர்: ராஜ்குமார் பெரியசாமி
முகுந்த் வரதராஜன் சிவகார்த்திகேயன் தனது சிறு வயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார்
கல்லூரியில் இந்து ரெபேக்கா வர்கீஸை சாய் பல்லவி)சந்திக்கும் முகுந்த் காதலில் விழுகிறார்.
காதல் ஒரு பக்கம் இருந்தாலும் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்போடு இராணுவ பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்.
அவர்களுடைய காதலிக்கு முகுந்த் வீட்டில் கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது.
முகுந்த் ராணுவ வீரன் என்பதால் இந்துவின் தந்தை அவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
எப்படியோ பல போராட்டங்களுக்கு பின் இரு வீட்டார் சம்மதத்துடன் முகுந்த் – இந்துவின் திருமணம் நடைபெறுகிறது.
ராணுவத்தில் முதலில் லெப்டினன்ட் இணையும் முகுந்த், பின் கேப்டனாக பதவி ஏற்க, அதனை தொடர்ந்து 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் சீட்டா கம்பெனியில் மேஜராக பொறுப்பேற்கிறார்.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் அல்டாஃப் பாபா எனும் பயங்கரவாதியை என்கவுண்டர் செய்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன். இந்த சம்பவத்திற்கு பின் என்ன நடந்தது என்பதே படத்தின் இப்படத்தின் கதை.
சிவகார்த்திகேயன் சாய் பல்லவி கூட்டணி மிகவும் எதார்த்தமாகவும் கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்
நந்தா பெரியசாமி எழுதும் சாய் ஒளிப்பதிவு ஜி வி பிரகாஷ் இசையும் படத்துக்கு ஏற்ற அமர்ந்து உள்ளது படத்தை பார்க்கும் ஒவ்வொருக்கும் அதை நோக்கியே பயணத்தை நோக்கி செல்கிறது: மொத்தத்தில் அமரன் மரியாதை கூடிய படம்