‘அலங்கு’ திரைப்பட விமர்சனம்

Share the post

‘அலங்கு’ திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள் : – குணாநிதி, காளி வெங்கட் , செம்பன், வினோத், சரத் அம்பானி, சுந்தரராஜா,
ஸ்ரீ ரேகா, சண்முகம் முத்துசாமி,ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய் மோர், மற்றும் பலர்
நடித்துள்ளனர்.

டைரக்டர் : – எஸ்.பி.சக்திவேல்.

மியூசிக் :- அஜிஷின்

படத்தொகுப்பு:-சான் லோகேஷின்

தயாரிப்பாளர்கள் :-டி.ஜி.பிலிம் கமபெனி ஆன் மேக்னஸ்.புரொட
க்ஷன்ஸ் – சபரிஸ் ஆன் சாங்கமித்ரா சௌமியா அன்புமணி .

தமிழகத்தின் மலைவாழ் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகன்

குணாநிதி, காளி என்று பேர் வைத்த நாயை மூன்று பேரும் சேர்ந்து

வளர்க்கிறார்கள் அந்த நாய் இவர்கள் எங்கு சென்றாலும் அந்த நாயுடன் கூட பயணிப்பவர்கள்,

கேரளாவில் வேலைக்காக தனது சகோதரர்கள் மற்றும்

உறவினர்களுடன் கேரளா செல்லும்

போதும் காளி நாயை தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

அங்கு எதிர்பாராமல் நடக்கும் சின்ன சம்பவத்தை தொடர்ந்து,

காளி நாய்க்கு ஆபத்து

ஏற்படுகிறது. அதில் இருந்து சண்டை போட்டு காளியை காப்பாற்றும்

வேலையில் ஒருவனின் கையை குணாநிதி வெட்டிவிடுகிறார

கையை இழந்தவர் குணாநிதி மற்றும் அவரது கூட்டாளிகளை

கொலை செய்ய துடிக்கும் போது, அவர்களிடம் இருந்து

தப்பிக்க முயற்சிக்கும் குணாநிதி, காட்டு வழியாக பயணம்

மேற்கொள்கிறார்கள். அந்த பயணம் அவர்களை தப்பிக்க

வைத்ததா? இல்லை வேறு ஆபத்தில் சிக்க கொள்ள

வைத்ததா? என்பதை ‘அலங்கு’ படத்தின் கதைக்களம்.

கதாநாயகன் தர்மா என்ற கதாபாத்திரத்தில்

மலைவாழ் பழங்குடியினராக வாழ்ந்திருக்கும் குணாநிதி,

துடிதுடிப்பான நடிப்பில் வென்று இருக்கிறார் அனைத்து எல்லா

உயிர்களையும் ஒன்றாக நினைத்து பார்த்து அன்பு செலுத்துபவர்,

தனது நாய்க்கு ஆபத்து வந்து. விட்டது. என்றதும் காட்டும் அதிரடி சண்டையில்.

நடிப்பு, சண்டைக்காட்சி, வனப்பகுதியில் பயணம் என

கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமா குணாநிதி கடுமையாக

உழைத்திருக்கிறார். படம் முழுவதும் வெறித்தனமாக இருக்க மலையன்

கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் வழக்கம் போல்

தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் நகைச்சுவை மற்றும்

குணச்சித்திரம் என இரண்டையும் கலந்து அசால்டாக நடித்துள்ளார்.

கேரள முதலாளியாக நடித்திருக்கும் செம்பன் வினோத், தனது மகள்

மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்து
வதற்காக

நாய்கள் மீது காட்டும் வெறித்தனத்தை கொஞ்சம்.
குறைத்திருக்கலாம்.

கையை இழந்துவிட்டு கொலை வெறியோடு நாயகனை துரத்தும்

சரத் அப்பானி, ஆக்ரோஷமான நடிப்பு மூலம் மிரட்டியுள்ளார்

நாயகனின் அம்மாவாக நடித்துள்ள ஸ்ரீரேகா, வித்தியாசமான

தோற்றத்தில் வந்து மற்றும் இன்றி நடிப்பிலும் மிக கவனம் செலுத்திருக்கிறார்.

சவுந்தர்ராஜா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார்,

மாஸ்டர் அஜய், கொட்ரவை, ஏஞ்சல், மஞ்சுநாத் உள்ளிட்ட

மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்

திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் முகம் காட்டுகிறார்கள்.

அடர்ந்த வனப்பகுதியின் அழகு மற்றும் ஆபத்துகளை

மிக அழகாக காட்சிப்படுத்திய உள்ள ஒளிப்பதிவாளர்

பாண்டிக்குமார், மலைவாழ் பழங்குயின மக்களாக

நடித்திருப்பவர்களையும்அவர்களின்

உணர்வுகளையும் நேர்த்தியாக மக்களிடம் கடத்தியிருக்கிறார்.

அஜீஷின் இசையில் பாடல்களும், பின்னணி

இசையும் கதைக்களத்தைபலமாக பிரதிபலிக்கிறது.

சான் லோகேஷின் படத்தொகுப்பு படத்தை

விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகர்த்திச் செல்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.சக்திவேல், காளி

என்ற நாயையும், அதன் செயல்பாடுகளையும்

மிக தத்ரூபமாக படமாக்கியுள்ளனர், வனப்பாதையின்

ஆபத்து நிறைந்த பயணத்தை சாகச

காட்சிகளாக வடிவமைத்துள்ளனர்.

பார்வையாளர்களைசீட் நுணியில் உட்கார வைத்து, மலைவாழ்

பழங்குடியின மக்களின் வாழ்வியலை சரியான

அளவில் கதையில் பயன்படுத்தியுள்ளார்.

வில்லனிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் கதாநாயகனின் போராட்டம் அடர்ந்த காட்டு

வனப்பகுதியின் பின்னணியில் சொல்லும் கமர்ஷியல்
ஆக்‌ஷன் படம்

என்றாலும், அதற்கான திரைக்கதையில் ஒரு நாயை

மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு

இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் அமைத்திருக்கும்

திரைக்கதை புதிதாக இருக்கிறது. நாய் தான் படத்தின் பிரதானம் போராட்டம் என்ற போதிலும்

அதற்கான காட்சிகள் குறைவாக இருப்பது சிறிய ஏமாற்றம்.

ஆக்‌ஷன் படம் என்றாலும்,

செல்லப்பிராணியான நாய் மட்டும் இன்றி

யானை, நரிக்கூட்டம் என்று வன விலங்குகளையும்

காட்சிகளில் பயன்படுத்தி

சிறுவர்களையும் கவர முயற்சித்திருக்கிறார்

இயக்குநர் சக்திவேல் தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு நூறு சதவீதம்

உழைத்திருப்பது திரைக்கதையில் விளக்கியது தெரிகிறது.

‘அலங்கு’ திரைப்படம் நண்பர்களின் அட்டகாசமான காட்டுப்பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *