
இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல முக்கிய பிரபலங்கள் சூழ நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ஸ் சிவமணி இசைக்க நடனமாடிய ரன்வீர் சிங்குடன் மணமக்கள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர், இயக்குனர் அட்லி ஆகியோர் நடனமாடினர்.