
‘அகத்தியா’ திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள் : – ஜிவா, ராசிகண்ணா, அர்ஜுன், எட்வர், சோனெனாப்ளிக் மாடில்டா, யோகி பாபு, வி.டிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – பா.விஜய்.
மியூசிக்:- யுவன் சங்கர் ராஜா.
தயாரிப்பாளர்கள் : – வேல்ஸ் பிலிம் இன்டர் நேஷனல் & வாமினடியா
திரைப்படத்துறையில் கலை இயக்குநராக பணியாற்றும் ஜீவா, புதுச்சேரியில் உள்ள
பிரெஞ்சு பங்களா ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ’ஸ்கேரி ஹவுஸ்’ என்று
சொல்லக்கூடிய பயங்கரமான வீடு போன்ற ஒரு அரங்கத்தை உருவாக்கி,
அதை பார்த்து ரசிக்க பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்.
மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் அந்த பங்களாவில்
நிஜமாகவே அமானுஷ்ய சக்திகள் இருப்பதால் அங்கே ஜீவாவை அந்த அமானுஷ்யங்கள் விரட்டியடிக்க பார்க்கிறது.
அநத சமயத்தில் அந்த பங்களாவில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதையும், தனக்கும் அந்த
பங்களாவுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருப்பதையும் தெரிந்து க் கொள்ளும்
ஜீவா, அதன் முழு பின்னணியை தெரிந்துக்கொள்ள முயற்சிக்க, அது என்ன ?
என்பதை திகில் கலந்த ஃபேண்டஸியாக மட்டும் இன்றி சித்தா மருத்துவம் மற்றும்
சித்தர்களின் முக்கியத்துவதோடு சொல்வதே ‘அகத்தியா’.
கதைக்களம்.
ஹீரோவாக காதல் செய்வது, மாஸ்
காட்டுவது என்று பயணிக்கும் வேடம் இதுல இல்லை,
மர்மத்தை கண்டுபிடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில்,
பெற்ற தாய்க்காக எப்படிப்பட்ட பேயையும் எதிர்கொள்ளும் கதைக் களத்தில் இறங்கும் ஜீவா,
கொடுத்த வேலையை குறையில்லாமல் சிறப்பாக செய்திருக்கிறார்.
ஆனால், கிளைமாக்ஸ் காட்சிகளை பார்க்கும் போது, ஜீவாவை காட்டிலும் அவரது
அனிமேஷன் உருவம் அதிகம் உழைத்திருப்பது தெரிகிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷி கண்ணா, படத்தின்
துவக்கம் முதல் இறுதி வரை கதாநாயகனின் காதலியாக வந்தாலும், அதற்கான எந்தவித
காட்சியும் படத்தில் இல்லாதது அவருக்கு
மட்டும் அல்ல எல்லா ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றம். தான் தந்துள்ளார்.
பிரெஞ்சு நாட்டு வாழ் தமிழராக சித்த மருத்துவர்
கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுனின் அனுபவமிக்க நடிப்பின் மூலம் மற்றும் திரைக்கதை இருப்பு படத்திற்கு பெரும் பலம்
சேர்த்துள்ளார்.
எட்வர்ட் சோனென்ப்ளிக், மாடில்டா ஆகியோர் திரைக்கதையோட்டத்
திற்கு ஏற்ப பயன்பட்டிருக்கிறார்கள். திணிக்கப்பட்ட கதாபாத்திரமாக
நுழையும் ரெடின் கிங்ஸ்லி வலுக்கட்டாயமான வசனங்களை பேசி பார்வையாளர்களை
எரிச்சலைக்கிறார். செந்தில், யோகி பாபு, விடிவி கணேஷ் என
கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் காமெடி நடிகர்கள் லேசாக சிரிக்க வைக்கிறார்கள்.
அதற்கு நன்றிகள்.
ஆரம்பத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பெயரை பார்த்ததும் உற்சாகமடையும்
பார்வையாளர்களை அம்மா பாடல் மற்றும்
”என் இனிய பொன் நிலாவே…” என்ற ரீமிக்ஸ் மூலம் மூடுபனி பாடலை தந்து
குஷிப்படுத்தும் யுவன், கதைக்கு ஏற்ப பின்னணி இசையமைத்திருக்
கிறார். அவருக்கு சபாஷ்…
பிரெஞ்சு காலக்கட்டத்தில் ஆடம்பர பங்களாவை பிரமாண்டமாக காண்பிடித்து ரசிக்க வைக்கும் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி,
தற்போதைய காலக்கட்டத்தில் பயங்கரமாக காண்பித்து பயமுறுத்தவும் செய்திருக்கிறார்.
படத்தின் அனைத்துக் காட்சிகளும் கலை இயக்குநர் பி.சண்முகத்தின் கைவண்னத்தில்
உருவான அரங்குகளில் நடக்கின்றன. ஆடம்பரமான பிரெஞ்சு பங்களாவாக இருந்து பிறகு பேய் பங்களாவாக மாற்றமடைந்து, பிறகு ஸ்கேரி ஹவுஸாக உருவாகும் ஒரு
கட்டிடத்தின் மாற்றத்தை மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கும்
கலை இயக்குநர் பி.சண்முகம், நாயகனின் வண்ணமயமிக்க வீடு, சித்தரின் எளிமையான கோவில் என
அனைத்தையும் அதிகம் மெனக்கெட்டு உருவாக்கியிருப்பது காட்சிகளில் தெரிகிறது.அவருக்கு பாராட்டுகள் …
எழுதி இயக்கியிருக்கும் பாடலாசிரியர் பா.விஜய், சித்த மருத்துவத்தின் நன்மைகள் மற்றும்
சித்தர்களின் வலிமையை கருப்பொருளாக வைத்துக்கொண்டு,
அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய திகில்
கலந்த ஃபேண்டஸி படத்தை தந்திருக்கிறார்.
இயக்குனரையும் எல்லா கலைஞர்கள்
சித்த மருத்துவர் அர்ஜுனின் கதை
மற்றும் அவருக்கு என்ன நடந்தது ? என்ற கேள்வி படத்தை
விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் பயணிக்க வைத்திருக்கிறது.
இரண்டாம் பாதியில் நடக்கும் கிராபிக்ஸ் சண்டைக்காட்சி கொஞ்சம் தூக்கலாக
இருப்பது திரைக்கதையின் போக்கை மாற்றம் செய்து இருந்தாலும்,
அவை அனைத்தும் சிறுவர்களை நிச்சயம் பார்த்து மகிழ்ச்சிக் கொண்டாட வைக்கும்.
சிறப்பான படம்.
‘அகத்தியா’ இது சமூகத்துக்கு தேவையான படம் ஆயுர்
வேதத்தில் நம் முன்னோர்கள் பண்டை காலத்திலிருந்து இப்போது வரை உண்டு
சாப்பிட்டார்கள். இப்போது வரை இன்னும்
அனைவருக்குமான நலமா ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
இதுல இந்த பட இயக்குனர் அதிக எலும்புறுக்கி நோய்யை பத்தி விரிவாக்கம் செய்துள்ளார்.
நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். கொஞ்சம் சிந்தித்து சிந்தியுங்கள்…