
அதிரி புதிரியாக
அதிரடியாக
அட்டகாசமாக
அமர்க்களமாக

ரசிகர்களின் அன்பான வேண்டுகோளுக்காக
மீண்டும்
அஜித் IN & AS பில்லா
மார்ச் 12ஆம் தேதி வெளியாகிறது

அஜித் கதாநாயகனாக நடித்த “பில்லா” திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளியாகியது விஷ்ணுவர்தன் இயக்கிய அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா.

பிரபு ரகுமான் சந்தானம் ஜான் விஜய் ஆகவே நடித்திருந்த அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நமிதா நடித்திருந்தார்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான “பில்லா” முழுக்க முழுக்க மலேசியாவிலே படமாக்க பட்டது
ஆனந்தா பிக்சர் சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் எல்.சுரேஷ் தயாரித்த இந்தத் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

வித்தியாசமான ஸ்டைலில் அஜீத் நடித்திருந்த “பில்லா” நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 12ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது

அஜித்தின் படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகின்றது என்பதால் பில்லா படத்தை உற்சாகமாக வரவேற்க அஜித் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.
