
“யாதும் அறியான்” திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள் :- தினேஷ், ஆனந்த் பாண்டி, அப்பு குட்டி, பிரானா, ஷியாமல்,
தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர்…
இயக்கம் : என்.கோபி
இசை: தர்ம பிரகாஷ்
ஒளிப்பதிவு :-எல்.டி
தயாரிப்பு: பிரேக்கிங் பாயின்ட் பிக்சர்ஸ்
கதாநாயகன் தினேஷும், நாயகி பிரானாவும் காதலிக்கிறார்கள்.
காதலியுடன் ஜாலியாகவும், நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என்று தினேஷ் ஆசைப்படுகிறார். ஆனால்,
கண்ணத்தில் ஓரு முத்தம் கொடுப்பதற்காக அனுமதி மறுக்கிற
பிரானா, மற்ற விஷயங்கள் திருமணத்திற்குப் பிறகு தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தனது வரட்சியான காதல் பற்றி நண்பரிடம் கவலைப்படும் தினேஷுக்கு அவரது
நண்பர் ஒரு யோசனை சொல்கிறார். அவரது யோசனைப்படி, தனது காதலி மற்றும் நண்பர் அவரது காதலி என இரண்டு
ஜோடியினர் வனப்பகுதியில் இருக்கும் சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
அந்த விடுதியின் பணியாளராக அப்புக்குட்டி நடித்து இருக்கிறார்.
நண்பரின் யோசனைப்படி தனது காதலியுடன் உடலுறவு கொள்ள கதாநாயகன் தினேஷ் முயற்சிக்கிறார்.
தினேஷின் முயற்சிக்கு முதலில் முட்டுக்கட்டை போடும் பிரானா, பிறகு அவரது தொடர் முயற்சிக்கு
அடிப்பணிந்து அவருடன் இணைந்து விடுகிறார். அனைத்தையும் முடித்துவிட்டு, சாதித்த மனநிலையில் இருக்கும்
தினேஷுக்கு அடுத்த சில நிமிடங்களில் பிரானா பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறார்.
அதில் இருந்து மீள்வதற்காக உதவிக்கு தனது நண்பரை அழைக்கும்
தினேஷுக்கு அவரது நண்பரும், காதலியும் அதைவிட பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறார்கள்.
இப்படி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை அனுபவித்துக்
கொண்டிருக்கும் தினேஷுக்கு உச்சக்கட்ட
அதிர்ச்சியாக அவர் பயணித்த 2024 ஆம் ஆண்டு, 2026 ஆக மாறுகின்றன.
தினேஷுக்கு எதிராக நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களின்
பின்னணி என்ன? என்பதை பல திருப்பத்துடன்
சொல்வது தான் “யாதும் அறியானன”
கதைக்களம் …
அறிமுக கதிநாயகன் தினேஷ், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.
அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு காதலியிடம் அவர் செய்யும்
சில்மிஷங்கள் திரையரங்கை அதிர வைக்கிறது.
முதல் பாதியில் அப்பாவியாக நடிப்பவர், இரண்டாம்
பாதியில் அவரா இவர்!, என்று ஆச்சரியப்பட
வைக்கும் அளவுக்கு நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
கதாநாயகியாக நடித்துள்ள பிரானா, கதாநாயகனின் நண்பராக
நடித்துள்ள ஆனந்த் பாண்டி, அவரது காதலியாக நடித்துள்ளார் ஷ்யாமல்,
விடுதி பணியாளராக நடித்திருக்கும் அப்புக்குட்டி என
அனைவரும் அளவாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எல்.டி வனப்பகுதியில் இருக்கும் பழைய
சொகுசு சொகுசு விடுதியை பார்வையாளர்
களுக்கு பீதி ஏற்படும் வகையில்
காட்சிப்படுத்தியிருக்கிறார், ஒரு அறையில் நடக்கும்
சம்பவங்களையும் மிகவும் நேர்த்தியாக படமாக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையில் பாடலும், பின்னணி இசையும் படத்திற்கு
மிகப்பெரிய பலம்
சேர்த்திருக்கிறார். குறிப்பாக பின்னணி இசை திரில்லர் காட்சிகளில்
இருக்கும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பயணித்த இருக்கிறார்கள்.
ஒரு எளிமையான கதைக்களத்தில் வைத்துக்கொண்டு, பல திருப்பங்கள் மூலம்
வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் ஜானர் படத்தை
கொடுத்துள்ளார். இயக்குநர் எம்.கோபி, 2024 ம் வருடம் நடக்கும் கதையை, 2026 -ம் ஆண்டில்
பயணிப்பது போன்று திரைக்கதை அமைத்துள்ளார். அதில் தமிழக அரசியலில் ஏற்பட இருக்கும்
மாற்றத்தினை தனது கற்பனையாக காட்சிப்படுத்திய விதம், என பல
விஷயங்களை எளிமையாக சொல்லியிருப்பதால் அதன் மூலம்
படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கதாநாயகனை சுற்றி நடக்கும் அனைத்து மர்மங்களுக்குப் பின்னணியில் ஏதோ
ஒன்று இருக்கிறது, என்று எதிர்பார்ப்பை கொடுக்கும்
இயக்குநர் கோபி, படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன்
மருத்துவரிடம் தன் கதையை சொல்லும் காட்சியை வைத்து,
படத்தின் இறுதியில் என்ன நடந்திருக்கும்
என்ற சஸ்பென்ஸை அவரே உடைத்திருப்பது படத்திற்கு சற்று
பலம் அமைந்தால் அந்த பலமாக மாற்றும் வகையில், கதாநாயகனின் நண்பர்கள் விஷயத்தில் இருக்கும்
மற்றொரு சஸ்பென்ஸுடன் படத்தை முடித்து
இரண்டாம் பாகத்திற்குரிய பேரையும் கொடுத்துள்ளார்.
“யாதும் அறியான்” படம் பார்த்தத்தில் யார்? இந்த மூன்று பேரைக் கொலை
செய்தது என்பதை அறிந்துக்கொள்ளும் ஆவலை தூண்டுவது தான் கற்பனை கலந்த இந்த “
“யாதும்அறியான்”
திரைப்படகதை களஞ்சியம். அனைவரும் கண்டு களியலாம்…