






StayHomeStaySafe
@PRO_Priya
@spp_media
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகை ஜெயசித்ரா நிவாரண உதவி
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். நடிகை ஜெயசித்ரா அதனை ஏற்று 200க்கு மேற்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை தனது சொந்த செலவில் வழங்கினார். தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் மற்றும் நடிகர் ஶ்ரீமன் முன்னிலை வகித்தனர். அருகில் வழக்கறிஞர் அய்யனார் மற்றும் நடிகர் பிரகாஷ். நடிகர் சங்க உறுப்பினர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொண்டனர்.