
துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு நடிகர் உதயாவின் வாழ்த்து
தமிழ்நாட்டின் துணை முதல்வராக மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நியமித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தயாரிப்பாளராகவும், நடிகராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலகில் பிரகாசித்து நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கும் உதயநிதி அவர்கள் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவது ஒட்டுமொத்த திரையுலகிற்கே பெருமை. தமிழ் திரையுலகத்திலிருந்து முதல் துணை முதல்வர் ஆகி வரலாறு படைத்திருப்பது உதயநிதி அவர்கள் என்பது பெருமகிழ்ச்சி.
இந்த உற்சாக தருணத்தில், கலைஞரின் மதி நுட்பத்தோடும், தளபதியாரின் உழைப்போடும் செயலாற்றி வரும் உதயநிதி அவர்கள் இன்னும் பல சாதனைகளை புரிந்து பல்வேறு உயரங்களை எட்ட வேண்டும் என்று ஒரு சகோதரனாகவும் சக கலைஞனாகவும் வாழ்த்தி, வணங்கி, மகிழ்கிறேன்.
நன்றி,
அன்புடன் நடிகர் உதயா.