நடிகர் ஷபீர் கல்லரக்கல் கன்னடத்தில் அறிமுகமான சிவராஜ்குமாரின் ‘பைரதி ரணகல்’ படத்திற்கு கிடைத்திருக்கும் அற்புத வரவேற்பு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

Share the post

நடிகர் ஷபீர் கல்லரக்கல் கன்னடத்தில் அறிமுகமான சிவராஜ்குமாரின் ‘பைரதி ரணகல்’ படத்திற்கு கிடைத்திருக்கும் அற்புத வரவேற்பு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

நடிகர் ஷபீர் கல்லரக்கலின் சினிமா கரியரில் மறக்க முடியாத மகிழ்ச்சியான வருடமாக 2024 இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நா சாமி ரங்கா’,  தமிழில் ‘பர்த்மார்க்’ மற்றும் மலையாளப் படம் ‘கொண்டல்’ ஆகியவை இவரது நடிப்பில் இந்த வருடம் வெளியாகி நான்கு மொழி ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகள் பெற்றுள்ளது. இருப்பினும், அவர் கன்னடத்தில் அறிமுகமான முதல் திரைப்படமான ‘பைரதி ரணகல்’ மூலம் நடிகர் சிவராஜ்குமாருடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது உற்சாகத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது. 

இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்ட நடிகர் ஷபீர், “’மஃப்டி’ படத்தின் மிகப்பெரிய ரசிகன் நான். சிவராஜ்குமார் படத்திலேயே என்னுடைய அறிமுகம் கன்னட சினிமாவில் நடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், சிவண்ணா சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எனது கனவும் நனவாகியுள்ளது. இத்தனை உயரம் அடைந்தாலும் அனைவரிடமும் தன்மையாக நடந்து கொள்கிறார். அவருடைய நடிப்பும் கவனமும் எனக்கும் உத்வேகமாக அமைந்தது. நிறைய விஷயங்கள் அவரிடம் இருந்து இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன். கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் பல கன்னட படங்களில் ஒப்பந்தமாக இந்தப் படம் முக்கிய காரணம். பெரும் நடிகர்களால் நிரம்பிய படம் மற்றும் குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். 

வரவிருக்கும் மாதங்களில் பல்வேறு மொழிகளில் ஷபீரின் பல படங்கள் வெளியாகத் தயாராக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *