“தி வாரியர்” தீவிர புரமோஷன் பணிகளின் நடுவே, நடிகர் ராம் பொத்தினேனி, நடிகர் சிலம்பரசனை சென்னையில் சந்தித்தார்

ராம் பொத்தினேனியின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படமான ‘ தி வாரியர்” திரைப்படம் ஜூலை 14, 2022 அன்று வெளியாக உள்ளது. இது நடிகர் ராமின் முதல் தமிழ் படம். எனவே, தற்போது இந்த படத்தை தமிழில் விளம்பரப்படுத்தும் பணியில் அவர் பிஸியாக உள்ளார்.

சரளமாக தமிழ் பேசும் ராம், தமிழ் ஊடகங்களுடன் உரையாடி விரிவான பேட்டிகளை கொடுத்து வருகிறார். இன்று புரமோஷன் நிகழ்ச்சியின் போது, ராம் பொதினேனி தனது அன்பு நண்பரான நடிகர் சிலம்பரசன் அவர்களை சந்தித்தார்.
இருவரும் மகிழ்ச்சியுடன் சிறிது நேரத்தை பகிர்ந்துகொண்டனர். அந்த புகைப்படம் இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ராம் பொத்தினேனி தனது ஸ்டைலான தோற்றத்தால் அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறார், அதே நேரத்தில் சிம்பு தனது முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் நீண்ட தாடியால் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

ராம் பொத்தினேனியின் அன்பு நண்பர் சிம்பு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதன் காரணமாகவே, ராம் பொத்தினேனி ‘ தி வாரியர்’ படத்திற்காக சிம்புவிடம் ஒரு பாடலைப் பாடும்படி கேட்டுக் கொண்டபோது, அவர் உடனடியாக ஒப்புக்கொண்டு சார்ட்பஸ்டர் புல்லட் பாடலைப் பாடினார், இப்பாடல் பல சாதனைகளை முறியடித்து, இன்னும் யூடியூப்பில் பிரபலமாக உள்ளது.
நாளை தெலுங்கு முன் வெளியீட்டு நிகழ்வுக்காக ராம் பொதினேனி இன்று ஹைதராபாத் திரும்புகிறார்.
“தி வாரியர்” படத்தினை இயக்குநர் N.லிங்குசாமி எழுதி இயக்கியுள்ளார். Srinivasaa Silver Screens தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சிட்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.