லியோ படத்தில் ரேப் சீன் இல்லை என்றும் வருத்தப்பட்டுக்கொண்டார் நடிகர் திரு.மன்சூரலிகான் !!

Share the post

நடிகர் திரு.மன்சூரலிகான்
நடிகை திரிஷாவுடன் நடிப்பது தொடர்பாக பேசியிருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கண்டிக்கத்தக்கது.
சினிமாவில் ரேப் சீன்களில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்ததை பெருமையோடு பேசுகிறார்.

லியோ படத்தில் ரேப் சீன் இல்லை என்றும் வருத்தப்பட்டுக்கொண்டார்.

அந்த ரேப் குறித்து பேசியதால் தான் இத்தனை கண்டனங்களும் மன்சூரலிகான் மீது பாய்கின்றன.
கூடுதலாக ‘பாய்’
என்பதாலும் பாய்கின்றன.
சந்தர்ப்பம் கிடைக்குமா என காத்திருந்த பாஜக கைது செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு போகிறது.

சினிமாவில் ரேப் சீன்கள் வருவதும்,அதில் நடிப்பதும் மன்சூரலிகான் படங்களில் மட்டுமல்ல; நம்பியார்,வீரப்பா காலத்திலிருந்து இருக்கின்றன.நம்பியார் ரேப் சீன்களில் நடித்து விட்டு
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு போய் தன்னை புனிதப்படுத்திக்கொண்டார்.
ஆனால்,மன்சூரலிகான் அப்படி இல்லை. பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்.
அதனால் இந்த விவகாரத்தில் மன்சூரலிகானுக்கு கூடுதல் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் வில்லன் நடிகர்கள் மட்டுமா? அல்லது
ரேப் சீன்களை வைத்து பெண்களை கொடுமைப்படுத்தும் இயக்குனர்களுமா?
‘ரேப்’ என சொன்னதும் மன்சூரலிகானுக்கு எதிராக கொதிக்கும் பாஜக தான்,
குஜராத்தில் பில்கிஸ் பானுவை வன்புணர்வு செய்து,
அவரது குழந்தை உள்ளிட்ட 11 பேரை படுகொலை செய்த குற்றவாளிகளை ஆதரிக்கிறது.
ஆயுள்சிறையிலிருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது.
ஆனால்,சினிமாவுக்காக திரு.மன்சூரலிகான் சொன்னதற்காக
பாஜக உள்ளிட்டோர்
அவர் மீது விழுந்து பிறாண்டுவது
மத அடிப்படையில் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

வன்னி

விடுதலைச்சிறுத்தைகள்

தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *