மனவலிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் குரங்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது
லாரண்ட் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் குட்டி குரங்கு ஒன்று முட்டாகக் கட்டப்படும் சிறு சுவரின் மீது ஏற முயற்சி செய்கின்றது. குட்டி குரங்கின் தாய் குரங்கு சிறு சுவரின் மீது எளிதாக ஏறி நிற்கின்றது.
இதனை பார்த்த குட்டி குரங்கு தானும் மேலே ஏறிச் செல்ல முயற்சி செய்தது. எனினும் உருவத்தில் சிறிதாக இருப்பதால் குரங்கின் கைகளும் சுவற்றை பிடிக்க எட்டவில்லை. பின்னர் யோசித்த குரங்கு தனது தாயின் வாலை பிடித்து மேலே ஏறிச் செல்ல முயற்சிக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.