நடிப்பில் ஆர்வம் செலுத்தும் இளம் இயக்குனர்களின் ரோல் மாடல்!

இயக்குனர் ஆர்வி.உதயகுமார் சின்னக் கவுண்டர், எஜமான், கிழக்கு வாசல், சிங்கார வேலன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்படுபவர். இயக்கம் மட்டுமின்றி தனது தனித்துவமான பாடல் வரிகளின் மூலம் பாடலாசிரியராகவும் கொண்டாடப்படுபவர். இவர் சமீப காலமாக நடிகராகவும் தனி முத்திரை பதித்து வருகிறார். பசங்க 2, அஞ்சல, தொடரி, தேவி உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் கலக்கியுள்ளார். தற்போது நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கும் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார்.