Sridevi Movies தயாரிப்பில் சமந்தா நடிக்கும் ‘யசோதா’ திரைபடத்துக்காக பிரமாண்ட செட் ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது !

நடிகை சமந்தாவின் அடுத்த பிரமாண்ட படமான ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார், திரைத்துறையில் திறமைமிகு இளம் ஜோடிகளான ஹரி – ஹரிஷ் கூட்டணி இந்த படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக கலை இயக்குனர் அசோக் மேற்பார்வையில், முக்கியமான காட்சிகளுக்காக 3 கோடி மதிப்பிலான பிரமாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியதாவது.., “சமந்தா நாயகியாக நடிக்கும் எங்களின் பிரமாண்ட படைப்பான ‘யசோதா’ படத்தின் கதை 30 முதல் 40% காட்சிகள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் நடக்கிறது. இதற்காக நாங்கள் பல நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றோம், ஆனால் இதுபோன்ற ஹோட்டல்களில் 35, 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது மிக சிரமமாக இருந்தது. எனவே, கலை இயக்குனர் அசோக்கின் மேற்பார்வையில் நானக்ராம்குடாவின் ராமாநாயுடு ஸ்டுடியோவில் 3 கோடி மதிப்பிலான 2 மாடிகள் கொண்ட பிரமாண்ட செட் ஒன்றைத் அமைக்க முடிவு செய்தோம். இதில் 7 முதல் 8 செட் டைனிங் ஹால், லிவிங் ரூம், கான்ஃபரன்ஸ் ஹால், லைப்ரரி என ஒரு 7 ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டது. பிப்ரவரி 3-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி, சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோரின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. டிசம்பர் 6 முதல் கிறிஸ்மஸ் வரை முதல் கட படப்பிடிப்பு முடித்து, ஜனவரியில் சங்கராந்திக்கு முன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது, எஞ்சியுள்ள முக்கிய காட்சிகள் கொடைக்கானலில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்து, இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

கலை இயக்குநர் அசோக், ‘ஒக்கடு’ படத்தின் பிரமாண்ட சார்மினார் செட் மற்றும் பல்வேறு படங்களில் பிரமாண்ட அரங்குகள் அமைத்ததற்காக பிரபலமானவர். அவர் தெலுங்கு மற்றும் தமிழில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதைக்கு ஏற்ற சிறந்த அரங்குகளை அமைத்து புகழ் பெற்றுள்ளார்., யசோதா செட் அவரது திறமையை மேலும் சிறக்க்க செய்வதாக இருக்கும் என்று படக்குழு கூறுகிறது.

இப்படத்தில் சமந்தா உடன், வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இசை : மணிசர்மா,
வசனம்: புலகம் சின்னராயனா, Dr. செல்லா பாக்யலக்ஷ்மி
பாடல்கள்: ராமஜோகையா சாஸ்திரி Sastry
கிரியேட்டிவ் டைரக்டர்: ஹெமம்பர் ஜஸ்தி
ஒளிப்பதிவு: M. சசிக்குமார்
கலை: அசோக்
சண்டைப்பயிற்சி: வெங்கட்
எடிட்டிங்: மார்தந்த் K. வெங்கடேஷ்
Line Producer: Vidya Sivalenka
இணை-தயாரிப்பு : சிண்டா கோபாலகிருஷ்ணா ரெட்டி
இயக்கம் : ஹரி – ஹரீஷ்
தயாரிப்பு : சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.