புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக உருவாகும் படம் ட்யூட்…
பனோரமிக் ஸ்டுடியோஸ் சார்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு படமாக உருவாகியுள்ளது ‘ட்யூட்’ (DUDE) இயக்குனர் தேஜ் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
தமிழில் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காதலுக்கு மரணமில்லை’, கன்னடத்தில் ‘ரீவைண்ட்’, மற்றும் ‘ராமாச்சாரி 2.O’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தேஜ். இவரது அடுத்த படமாக ‘ட்யூட்’ (DUDE) உருவாகியுள்ளது.
மேலும் இந்தப் படத்தில் ராகவேந்திரா ராஜ்குமார், சான்யா காவேரம்மா, மேகா, மோகினி, திரீத்தி, அனர்க்யா, தீபாலி பாண்டே, ஸ்ரீ, இவாஞ்சலின், சோனு தீர்த் கவுடா, யஷாஸ்வினி, மெர்ஸி, மோனிஷா, ராஜேஸ்வரி, சுந்தர்ராஜ், ஸ்பர்ஷா ரேகா மற்றும் விஜய் செந்தூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு பிரேம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எமில் முகமது இசையமைத்துள்ளார்.
தற்போது இந்த படத்தில் இருந்து “எமிட்டோ மாயா மந்த்ரமாயே.. மதி ஜிங்கலா பரிகெத்தேனே” என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி, சோசியல் மீடியாவில் வைரலாகி, ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் பாடலின் தெலுங்கு வெர்ஷனை S.P மனோகர் எழுத, அதை அபிஷேக் பாடியுள்ளார்.
கால்பந்து விளையாட்டு பின்னணியில் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக ‘ட்யூட்’ (DUDE) உருவாகி வருகிறது. குறிப்பாக கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக இந்த படம் தயாராகி வருகிறது..
இந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்னொரு பக்கம் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஜூன் அல்லது ஜூலையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தொடர்பு ; A.ஜான்