காதலை புதிய பரிமாணத்தில் சொல்லும்
” காத்திருந்தேன்”
சுரேஷ் பாரதி இயக்கும் 2வது படம்.
வளர்ந்துவரும் இளம் நடிகர் இளையா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் :- ” காத்திருந்தேன் “.
அமராவதி கிரியேஷன்ஸ் சார்பில் ராம்கோவிந்த் தயாரிக்கும் ‘ காத்திருந்தேன்” படத்தில் சுஸ்மிதா நாயகியாக நடிக்கிறார். சுரேஷ் பாரதி, இளங்கோவன், ஆர்.கே. கோபிநாத், இளங்கேஸ்வரன், இராமசாமி, கணேஷ், புதுமுகம் காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ரா.முத்துராஜ் ஒளிப்பதிவு செய்கிறார் – எஸ்.பி.விஜய் இசையமைக்கிறார்.
இ நாயகன்களில் ஒருவராக நடித்துக்கொண்டே இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது 2வது படமாக இயக்கும் சுரேஷ் பாரதி கதையை பற்றி கூறியதாவது, “
முறையான காதல், கள்ளக்காதல், நல்ல காதல், என காதலில் பலவகை உண்டு. முற்றிலும் மாறுபட்ட முழுவதும் வேறுபட்ட காதலை சொல்ல உள்ளேன். இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் சொல்லப்படாத காதல் கதை இது – காதலிக்கும் இருவரும் சேர்ந்து வாழக்கூடாது என்று இந்த சமுதாயம் நினைக்கிறது. தடைக்கு காரணம் சாதி, மதம், பணம், அரசியல் எதுவும் இல்லை. வேறு எதற்காக இவர்கள் கேரக்கூடாது என்பதை சஸ்பென்சாக இதுவரை யாரும் சொல்லப்படாத புதிய பரிணாமத்தோடு சொல்வதற்கு திரைக்கதையை வடிவமைத்துள்ளேன். நிச்சயம் மக்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்று நம்பிக்கையோடு கோவை, சேலம், கடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் படமாக்குகிறேன்” என்று இயக்குனர் சுரேஷ் பாரதி கூறுகிறார்.
விஜயமுரளி
PRO