‘A to Z செய்திகள்’
(தினமும் மதியம் 2:00 மணிக்கும், இரவு 8:30 மணிக்கும்)
அரசியல், கிரைம், சர்வதேச செய்திகள் என ஒரே நாளில் ஓராயிரம் செய்திகளை கடந்து போக வேண்டியுள்ளது. அவசர உலகில் அத்தனை செய்திகளையும் பார்க்கும் பொறுமையும் நேரமும் யாருக்கும் இருப்பதில்லை.
ஃபாஸ்ட்புட் யுகத்தில் ராக்கெட் வேகத்தில் செய்திகளை காண விரும்புகின்றனர் மக்கள். ஒரு செய்தியின் அத்தனை பக்கத்தையும் ஆராய்ந்து தருவது ஒரு கோணம் என்றால் அதே செய்தியை படுவேகமாக சுருங்கச் சொல்லுவது இன்னொரு கோணம்.
அந்த கோணத்தில் சில நிமிடங்களில் பல செய்திகளை உள்ளூர் முதல் உலகம் வரை விரைந்து தருகிறது ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியின் A to Z செய்திகள்.
செய்தி வாசிப்பாளரின் படு வேகமான உச்சரிப்பு, அடுத்தடுத்து மாறும் காட்சிகள் என பரபரப்பான A to Z செய்திகளை தினமும் மதியம் 2:00 மணிக்கும், இரவு 8:30 மணிக்கும் அரை மணி நேரம் தொகுத்து வழங்குகிறது ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி.