டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2-ன் மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றிவாகை சூடிய மனோஜ் – அம்ரிதா ஜோடி
~ தங்க கோப்பையுடன் 5 இலட்சம் ரொக்கப்பரிசையும் பெற்ற வெற்றியாளர்கள் ~
சென்னை, 11 ஜனவரி, 2022: கலர்ஸ் தமிழின் மிகப் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2, கடந்த ஞாயிறன்று மாபெரும் இறுதிப்போட்டி நிகழ்வோடு நிறைவடைந்தது. கேரளாவைச் சேர்ந்த திறமைமிக்க ஜோடியான மனோஜ் மற்றும் அம்ரிதா இவ்விருதையும் மற்றும் ரூ.5 இலட்சம் என்ற ரொக்கப் பரிசையும் வென்றது. தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு சேனலான, கலர்ஸ் தமிழ், டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2-ன் புதுமையான கருத்துருவின் வழியாக உலகெங்கிலும் ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து, மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சீசன் முழுவதிலுமே அற்புதமான நடனங்களின் வழியாக அனைத்து நடன ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் மனதை மனோஜ் மற்றும் அம்ரிதா ஜோடி தன்வசப்படுத்தியிருந்தது. நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியிலும் கூட தற்காலத்திய மற்றும் ஃப்ரீஸ்டைல் நடனங்களில் முதன்மை வகித்து பல்வேறு வகையான நடன வடிவங்களில் தங்களது பிரமாதமான நடனத்திறனை இந்த ஜோடி வெளிப்படுத்தியிருந்தது. சென்னையைச் சேர்ந்த இளம் சிறார்களான ப்ரித்வி மற்றும் தியான், இறுதிப்போட்டியில் இரண்டாவது இடம்பெற்று ரூ.3 இலட்சம் என்ற ரொக்கப்பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினரான டான்ஸ் குரு கலா மாஸ்டர் மற்றும் தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் ஆகியோருடன், பிரபல நடுவர்களான நடிகை குஷ்பூ மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோருக்கு இந்த இறுதிப்போட்டி கடும் சவாலானதாகவே இருந்தது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து குழுவினருமே அவர்களது துடிப்பான, நலினமான நடன அசைவுகளின் மூலம் அனைவரையுமே ஈர்த்ததே இதற்குக் காரணம். நடன அமைப்பாளர் யோபுவின் வழிகாட்டல் மற்றும் பயிற்சியோடு களமிறங்கிய மனோஜ் மற்றும் அம்ரிதா ஜோடி அதிக ஆபத்தான ஏரோபட்டிக் நடனத்தை தேர்வு செய்திருந்தது. தங்களது படைப்பாக்கத் திறன், நெகிழ்வுத்தன்மை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த நடனத்தை அவர்கள் மிக எளிதாகவும், வெற்றிகரமாகவும் நிகழ்த்திக் காட்டினர். இதற்கு ஏறக்குறைய நிகராக, தங்களை ஆற்றலை வெளிப்படுத்திய ப்ரித்வி – தியான் ஜோடி, அவர்களது ஆர்வம் மற்றும் தளர்வில்லாத ஆற்றலின் மூலம் மேடையையே அதிர வைத்தனர். அவர்களைத் தொடர்ந்து கிளாசிக்கல் தாரகைகளான காவ்யா மற்றும் மகாலட்சுமி இரண்டாவது ரன்னரப்பாக தேர்வு செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களது சிறப்பான நடனத்திற்காக ரூ.2 இலட்சம் ரொக்கப் பரிசையும் பெற்றனர்.
வெற்றியாளர்களான மனோஜ் மற்றும் அம்ரிதா பேசுகையில், “கலர்ஸ் தமிழின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான டான்ஸ் Vs டான்ஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளர்களாக சாதனை படைத்திருப்பதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம். நடன நுட்பங்களை இன்னும் மெருகேற்றவும், பல்வேறு நடனங்களை கற்றுக்கொள்ளவும் இந்த தளம் எங்களுக்கு உண்மையிலேயே உதவியிருக்கிறது. இந்த துறை இதுவரை கண்டிருக்கின்ற மிக நேர்த்தியான நடனக் கலைஞர்கள் சிலரோடு இந்த மேடையைப் பகிர்ந்துகொண்டது எங்களது அதிர்ஷ்டம் என்றே நாங்கள் கருதுகிறோம். நடுவர்கள் நடிகை குஷ்பூ, பிருந்தா மாஸ்டர் மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் முன்னிலையில் நடனமாடியது உண்மையிலேயே அற்புதமான அனுபவமாகும். இந்த நடனக்கலையை திறம்பட கற்றுக்கொண்டு, வெளிப்படுத்தவும் எங்களுக்கு உதவியதோடு, எங்கள் மனதில் நம்பிக்கை விதையை ஆழமாக விதைத்ததற்காகவும் எங்களது வழிகாட்டுனரும், நடன அமைப்பாளருமான யோபு அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்,” என்று கூறினர்.
இதில் பங்கேற்ற ஒவ்வொரு ஜோடிக்கும் அவர்களது பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் நடுவர்கள் வழிகாட்டியதன் மூலம் தொலைக்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. கலர்ஸ் தமிழில் இந்த நிகழ்ச்சிக்கான பயணம் குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட நடிகை குஷ்பூ, “டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2-ன் மூலம் ரியாலிட்டி நிகழ்ச்சியின் நடுவராக திரும்ப செயலாற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அற்புதமான திறன்கொண்ட நடனக் கலைஞர்களை மதிப்பீடு செய்வது ஒரு சவால்மிக்க பணியாகவே இருந்தது. ஆனால் ஒரேயொரு ஜோடி மட்டுமே இறுதியில் வெற்றி காண முடியும். மனோஜ் – அம்ரிதா ஜோடி அவர்களது தனித்துவமான ஸ்டைல் மற்றும் கற்பனைக்கு எட்டாத சிறப்பான நடனத்தின் மூலம் உண்மையிலேயே எங்களது எதிர்பார்ப்புகளையும் மிஞ்சி விட்டனர். லைஃப் லைனைப் பயன்படுத்த இந்நிகழ்ச்சிக்கு அவர்களை மீண்டும் திரும்ப அழைத்து வரும் எனது முடிவு குறித்து எனக்கு மகிழ்ச்சியே. இந்த முடிவு சரியானது என்று அவர்களது வெற்றி நிரூபித்திருக்கிறது,” என்று கூறினார்.
நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் பேசுகையில், “இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு இது இரண்டாவது முறை. முந்தையதை விட சீசன் 2 ஒரு படி சிறப்பானதாகவே இருந்ததில் எனக்கு வியப்பேதுமில்லை. தொடக்கத்திலிருந்தே மிகப்பிரமாதமான நடனத்திறமையை வெளிப்படுத்தியதால் மனோஜ் மற்றும் அம்ரிதாவை வெற்றியாளர்களாக அறிவிப்பதில் எங்களுக்கு பெருமகிழ்ச்சி அளித்தது. ஒவ்வொரு சுற்றிலும் அவர்களது வளர்ச்சியை காண்பது ஒரு பெருமைமிக்க தருணமாகும். விடாமுயற்சி மற்றும் உழைப்பினால் அவர்கள் வெகுதூரம் பயணித்திருக்கின்றனர் என்றே நான் சொல்வேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தங்களது முந்தைய நிகழ்ச்சியை விட சிறப்பாக திறனை வெளிப்படுத்த வேண்டுமென்ற அவர்களது மனஉறுதி தான் இந்த வெற்றிக்கு அவர்களை அழைத்து வந்திருக்கிறது. சிறப்பான எதிர்காலம் அமைய அவர்களை நாங்கள் வாழ்த்துகிறோம். இன்னும் பெரிய சாதனைகளை அவர்கள் நிகழ்த்துவதைக் காண நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்,” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சி 16 போட்டியாளர்களோடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. இறுதியில் 6 ஜோடிகள் இறுதிப்போட்டிக்கான பங்கேற்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அரங்கின் பிரமாண்டம், அழகாக தேர்வு செய்யப்பட்ட பாடல்கள், திறமையான நடுவர்கள், சிறப்பான நடனத்திறன் கொண்ட கலைஞர்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட தொகுப்பாளர்கள் ஆகியோரே தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்தனர் என்றே சொல்லலாம். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம்.
கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். “இனி தினம் தினம் கலர் காட்டும்” என்ற புதிய விளம்பர விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், வழக்கமான ஸ்டீரியோடைப்களை நொறுக்கி, கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்துவதிலும், முற்போக்கான கருத்தாக்கங்களை அதிக தாக்கம் ஏற்படுத்துகிற நவீன நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை சென்றடைவது மீது முனைப்பு காட்டி வருகிறது. வேலுநாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை,. டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், சிங்கிங் ஸ்டார்ஸ், ஓவியா, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி, மற்றும் திருமணம், தறி, மலர், கல்லா பெட்டி, கோடீஸ்வரி, உயிரே, அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோஷம் & கலர்ஸ் கிச்சன் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்ற எமது நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.
வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் நெட்வொர்க்18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம் சிபிஎஸ் ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களான ஒளிபரப்பு, ஆன்லைன், தள அடிப்படையிலான, கடைகளுக்கு உள்ளே மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் வழியாக இந்தியாவின் எண்ணற்ற மக்களை சென்றடைகிறது.