வேலன் படம் ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது – நடிகை பிரிஜிடா !
வேலன் திரைப்படம் டிசம்பர் 31, 2021 உலகம் முழுதும் வெளியானதில், நடிகை பிரிஜிடா வெகு உற்சாகமாக இருக்கிறார்.
நடிகை பிரிஜிடா கூறுகையில், “என்னைப் போன்ற நடிப்பு ஆர்வமுள்ள கலைஞர்கள், எப்போதும் ஒரு சிறந்த குழுவுடன், ஒரு நல்ல திரைப்படத்தில் நடிப்பதையே விரும்புகிறார்கள், ஏனெனில் அது போன்ற திரைப்படங்களில் தான், ஒருவர் தங்கள் நடிப்பு திறமையை உணர்ந்து, மேம்படுத்திக்கொள்ள முடியும். பணிவு மிக்க, உயர்ந்த உள்ளம் கொண்ட மற்றும் அன்பானவர்கள் அடங்கிய ஒரு குழுவுடன் பணிபுரியும் அற்புதமான அனுபவத்தை “வேலன்” திரைப்படம் எனக்கு தந்தது. இந்த திரைப்படத்தில் என்னையும் ஒரு அங்கமாக இணைத்து கொண்ட தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் சாருக்கு நன்றி. வேலன் எனக்கு மிகவும் நெருக்கமானதொரு படைப்பு. இந்தப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் கவினுக்கு நன்றி. இணைந்து பணியாற்றுவதற்கு முகேன் மிகவும் அழகான நபர். அவருடன் இணைந்து பணிபுரிந்த போது தான், மக்கள் ஏன் அவரை விரும்புகிறார்கள் என்பதை நான் தெளிவாக புரிந்துகொண்டேன். சூரி சார் தொடர்ந்து ஒட்டுமொத்த படக்குழுவினரையும் சிரிக்க வைத்து கொண்டேயிருந்தார். மீனாட்சி கோவிந்தராஜன் ஒரு மிகச்சிறந்த நடிகை. பிரபு சார் போன்ற ஒரு நடிகருடன் பணிபுரிவது என் பாக்கியம். தொழில்துறையில் பரந்த அனுபவமும் மற்றும் நீண்ட பயணமும் கொண்ட அவர், குழுவில் ஒவ்வொரு உறுப்பினருடனும் மிகவும் இனிமையாகவும், கண்ணியமாகவும், நட்பாகவும் இருப்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது. வேலன் இந்த ஆண்டு முடிவடைந்து புத்தாண்டை இனிமையாக துவங்க, ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்பட அனுபவமாக வேலன் இருக்கும்.
கவின் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் முகன், சூரி, மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை Skyman Films International சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். பிரபு, ஹரீஷ் பேரடி மற்றும் இன்னும் பல முன்ணனி நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மோலிவுட்டின் முன்னணி இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். கோபி ஜெகதீஸ்வரன் (ஒளிப்பதிவு), K சரத்குமார் (எடிட்டர்), D.பாலசுப்ரமணியன் (கலை), மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்), தினேஷ்-விஜி சதீஷ்-ராதிகா (நடன அமைப்பு), சபா டிசைன்ஸ் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), தாத்ஷா A பிள்ளை-K ராஜன் (ஆடைகள்) ), V.சித்தரரசு (ஸ்டில்ஸ்), சந்திரன் பச்சமுத்து-சவரிமுத்து-கவின் (உரையாடல்கள்), D.உதயகுமார் (ஒலி வடிவமைப்பு), ஹரிஹரசுதன் (VFX), N.சக்திவேல் (ஒப்பனை), N.A.அன்பரசு (இணை இயக்குநர்), N.நிர்மல். (புரொடக்சன் எக்ஸிகியூட்டிவ்), மற்றும் J.P. விக்ரம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் இந்த திரைப்படத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.