PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில்,அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “டிரிக்கர்” !
“டிரிக்கர்” சுண்டி இழுக்கப்படும் விசை, உந்தி தள்ளுதல் எனலாம், அதன் அர்த்தம் தூண்டல், டிரிக்கர் அனைவரது வாழ்விலும் இன்றியமையாத விளைவுகள் தரும் ஒரு அம்சமாக இருக்கிறது. இந்த தூண்டல் ஒரு நல்ல விசயத்திற்காக நடைபெறும்போது, அது ஒரு சமூகத்தில் அனைவரது வாழ்வுக்கும் நன்மை உண்டாக்குகிறது. இந்த உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் திரைப்படைப்பாக தான் அதர்வா முரளி நடிக்கும் “டிரிக்கர்” திரைப்படம் உருவாகவுள்ளது. தூண்டல் எனும் கருவின் அடிப்படையில் ஒரு அருமையான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன். ஒவ்வொரு திரைப்படத்திலும், நாயகன் அதர்வா முரளி திரைத்துறையில் ஒவ்வொரு படியாக தன் நட்சத்திர அந்தஸ்தில் உயர்ந்து வருகிறார். இத்திரைப்படம் அவரை அடுத்த தளத்திற்கு உயர்த்துவதாக அமையும். விநியோக வட்டாரத்தில் அவர், எப்போதும் லாபம் தரும், ஜெயிக்கும் குதிரையாக கொண்டாடப்படுகிறார். இன்னொருபுறம் இயக்குநர் சாம் ஆண்டன் வித்தியாசமான களத்தில், கமர்ஷியல் அம்சங்களுடன், புதிதான கதை அமைப்பில், அனைவரையும் ஈர்க்கக்கூடிய தரமான வெற்றிப்படங்களை தந்து, பாராட்டுக்களை குவித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் “டிரிக்கர்” திரைப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்சன் திரைப்படமாக, அதர்வா முரளியை மொழி தாண்டி அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படியான படைப்பாக உருவாகிறது. PRAMOD FILMS பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா பல மொழிகளிலும், இந்திய ரசிகர்கள் ரசிக்கும்படியான அழகான திரைப்படங்களை வழங்கி வருகின்றனர். டிரிக்கர் திரைவடிவமைப்பில் மிகுந்த மகிழ்ச்சி கொள்ளும், இந்நிறுவனத்தின் பெருமை மிகு 25 வது படைப்பாக “டிரிக்கர்” திரைப்படம் உருவாகவுள்ளது.
“டிரிக்கர்” திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். அருண் பாண்டியன், சீதா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் மற்றும் இன்னும் பல முக்கிய நடசத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். திலீப் சுப்பராயன் ஆக்ஷன் கோரியோகிராஃபராக பணியாற்ற, ராஜேஷ் கலை இயக்கம் செய்கிறார், தீபாலி நூர் காஸ்ட்யூம் டிசைனராகவும், கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். சுரேஷ் சந்திரா & ரேகா D one (மக்கள் தொடர்பு), Lorven Studios (VFX), ஓமர் (நிர்வாகத் தயாரிப்பாளர்) மற்றும் கோகுல்.K (கிரியேட்டிவ் புரடியூசர்) ஆக பணியாற்றுகின்றனர்.
இயக்குநர் சாம் ஆண்டன் எழுதி இயக்கும் டிரிக்கர் திரைப்படத்தை, PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா தயாரிக்கின்றனர்.