
CallsFromFeb26
@sabarish14ip @Rockfortent @kbsriram16 @APVMaran @PRO_Priya @spp_media
சிறப்பான முறையில் நடந்து முடிந்த “கால்ஸ்” படத்தின் சிறப்பு திரையிடல்!! 26 ஆம் தேதியான நாளை வெள்ளி திரையில் வரவிருக்கிறது.

மறைந்த நடிகை வி.ஜே.சித்ராவின் முதல் மற்றும் கடைசி படமான கால்ஸ் பல எதிர்பார்ப்புகளை சுமந்து நாளை 26 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் துவங்கி கடைசியாக வெளிவந்த காலங்கள் பாடல் வரை, மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கி வந்தனர். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிரபலங்களுக்கான சிறப்பு திரையிடல் நேற்று நடைபெற்றது. இப்படத்தின் இயக்குனர் திரு.சபரிஷ் அவர்கள் வருகை புரிந்த அனைத்து பிரபலங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும்,படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மக்கள் தொடர்பாளர் ப்ரியா அனைவருக்கும் தங்களின் ஆதரவிற்கும் மிகப்பெரிய நன்றி என தெரிவித்துள்ளார்.

