இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைக் காணிக்கை: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பின்னணியிலான திரைப்படம் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம் !

Share the post

இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைக் காணிக்கை: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பின்னணியிலான திரைப்படம் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்

பஹல்காம் சம்பவம் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டு உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படத்தின் பயணம், அயோத்தியில் உள்ள புனிதமான ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தில் பிரம்மாண்ட விழாவுடன் தொடங்கியது. இது இந்தியத் திரையுலகில் ஒரு மைல்கல் தருணம். பிரசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அனூப் மோகன் தயாரிக்க, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்குகிறார். ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி மேஜர் விஜய் பார்கவ் கதை எழுதியுள்ளார். பல மொழிகளில் உருவாகும் இந்த லட்சியப் படைப்பு, தேசத்தின் ஆன்மா, வீரம் மற்றும் மன உறுதிக்கு ஒரு காணிக்கையாக உருவாக்கப்படுகிறது.

அயோத்தி, நவம்பர் 27, 2026: இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான தொடக்கங்களில் ஒன்றாக இது அமைந்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பிரசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அனூப் மோகன் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்குகிறார். நாட்டின் மிகவும் போற்றப்படும் ஆன்மிகத் தலங்களில் ஒன்றில் இந்த விழா நடைபெற்றது. சமகால இந்திய வரலாற்றின் ஒரு வலிமையான அத்தியாயத்தை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் லட்சியப் பயணம் இதனுடன் தொடங்கியுள்ளது.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தில் பூஜை நடத்தப்படும் முதல் திரைப்படம் இதுவே என்றும், இது இந்திய சினிமாவில் ஒரு வரலாற்றுச் சாதனை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் அர்ஜுன் தனது மனைவி நிவேதிதா அர்ஜுனுடன் விழாவில் கலந்துகொண்டார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர். இதனால் விழா மிகுந்த சிறப்புடனும் நினைவில் நிற்கும் வகையிலும் நடைபெற்றது.

தேசத்துக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு படைப்பு

வழக்கமான கமர்ஷியல் சினிமாவின் எல்லைகளைத் தாண்டி, ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஒரு காணிக்கையாக நிற்கும் படைப்பை உருவாக்க வேண்டும். இதுவே இயக்குநர் அர்ஜுன், தயாரிப்பாளர் அனூப் மோகன் இருவரின் பொதுவான நோக்கம்.

ஆக்‌ஷன் கதைசொல்லலில் அர்ஜுனுக்குத் தனித்துவமான ஆளுமை உண்டு. படத்தைப் பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டும் என்பது அனூப் மோகனின் லட்சியம். இந்த இரண்டும் இணைந்து, பிரம்மாண்டம், உள்ளடக்கம், உணர்வு, நம்பகத்தன்மை ஆகிய அனைத்தும் கொண்ட திரை அனுபவமாக இப்படம் உருவாகிறது. கதைக்குரிய பிரம்மாண்டத்துடன் அதைச் சொல்வதிலும், அதன் உணர்வுப்பூர்வமான மையம் எங்கும் நீர்த்துப்போகாமல் பார்த்துக்கொள்வதிலும் படக்குழு உறுதியாக உள்ளது.

ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொடும் கதை

தேசத்தின் கூட்டு நினைவில் இன்றும் ஆழமாகப் பதிந்திருக்கும் ஒரு கதைதான் இப்படத்தின் இதயம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை அத்தியாயத்தை வலிமையான திரைமொழியில் சொல்கிறது.

இப்படத்தின் திரைக்கதையை மேஜர் விஜய் பார்கவ் எழுதியுள்ளார். ராணுவப் பணியின் யதார்த்தம், தியாகம், தேசப் பாதுகாப்பு ஆகியவை குறித்து அவருக்கு நேரடி அனுபவமும் ஆழமான புரிதலும் உண்டு. நம்பகத்தன்மையும் உணர்வு ஆழமும் தேவைப்படும் இந்தக் கதைக்கு, மண்ணில் வேரூன்றிய ஒரு புதிய பார்வையை அவர் கொண்டு வருகிறார்.

பஹல்காம் தாக்குதல் வெறும் தலைப்புச் செய்தியாகக் கடந்து போன சம்பவம் அல்ல. கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதில் ஆறாத காயமாகப் பதிந்த நிகழ்வு அது. இந்தக் கதைக்களத்தைப் படக்குழு நுட்பமாகவும் உறுதியாகவும் தேசப் பொறுப்புணர்வுடனும் அணுகுகிறது. அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் இருந்த மனித உணர்வுகள், துணிச்சல், மன உறுதி ஆகியவற்றை ரசிகர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதே இப்படத்தின் நோக்கம்.

படக்குழுவைப் பொறுத்தவரை இது வெறும் திரைப்படம் அல்ல. நாடு முழுவதும் உள்ள மக்கள் நினைவில் வைக்க வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய, உணர வேண்டிய ஒரு கதையைச் சொல்லும் வாய்ப்பு இது.

ஒன்பது மொழிகளில் ஒரு பான்-இந்தியா படைப்பு

இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் ஒன்பது மொழிகளில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கதை மொழி, நிலம், கலாச்சார எல்லைகளைக் கடந்து பயணிக்கும்.

தேசப் பெருமையிலும் கூட்டு நினைவிலும் வேரூன்றிய இந்தக் கதை, மொழி, பிராந்தியம் பாராமல் ஒவ்வொரு இந்தியரையும் சென்றடைய வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளது.

படத்தின் தலைப்பு தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒரு சிறப்பு அறிவிப்பின் மூலம் தலைப்பு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

2027 சுதந்திர தினம்: தேசத்துடன் ஒரு சந்திப்பு

படப்பிடிப்பு வரும் மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்தியாவின் 81-வது சுதந்திர தினமான 2027 ஆகஸ்ட் 15 அன்று படத்தைத் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

வெளியீட்டுத் தேதியே தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மை, தேசிய உணர்வு ஆகியவற்றைக் கொண்டாடும் நாளில் இந்தக் கதையைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது படக்குழுவின் கனவு.

இப்படத்துக்குப் பிரம்மாண்டமான தயாரிப்பு, வலிமையான கதைக்களம், புகழ்பெற்ற இயக்குநர் என எல்லாம் அமைந்துள்ளன. கதையும் தேசிய அளவிலும் உணர்வு அளவிலும் ஆழமான முக்கியத்துவம் கொண்டது. இதனால் இப்படம் இப்போதே மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

திரைப்படத்தைத் தாண்டி… தேசத்துக்கு ஒரு காணிக்கை

அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் நடந்த புனிதமான தொடக்கம் முதல் 2027 சுதந்திர தின வெளியீடு வரை, இப்படம் பாக்ஸ் ஆபீஸ் எதிர்பார்ப்புகளைத் தாண்டிய ஒரு லட்சியத்தைச் சுமந்து நிற்கிறது.

இந்தியாவின் ஆன்மாவைப் போற்றும் ஒரு திரைக் காணிக்கையை உருவாக்க வேண்டும். அது ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் எதிரொலிக்க வேண்டும். இதுவே இயக்குநர் அர்ஜுன், தயாரிப்பாளர் அனூப் மோகன் இருவரின் பெரிய நோக்கம்.

தலைப்பு இன்னும் ரகசியம். பயணம் தொடங்கிவிட்டது. வரவிருக்கும் அறிவிப்பை ஒட்டுமொத்த தேசமும் உற்றுநோக்கும் என்கிறது படக்குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *