
” டெலிவரி பாய்” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
கதைக் கரு :-
்்்்்்்்்்்்்
தன்னைப் பெற்றத் தாயின் உயிரைக் காப்பாற்றப் போராடும் ஓர் இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களே இந்தப் படத்தின் கதையின் கதைக் கரு.
கதையும் அதன் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கபடும் நகரம் கோயம்புத்தூர். கோவை என்று அழைக்கப்படும் இந் நகரில் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளியாக வருகிறார் இந்தப் படத்தின் கதாநாயகன் லியோ சிவகுமார்.
இவரின் கனவு காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவது. அதற்கான முயற்சியும் செய்து வருகிறார்.
இதன் மத்தியில் கௌதம் என்னும் நபரை சந்திக்க அவ்வப்போது சென்னைக்குச் சென்று வருகிறார். அவர் எதற்காக சென்னை செல்ல வேண்டும் ? அதற்கான அவசியம் என்ன ? யார் அந்தக் கௌதம் ? அவருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு ? என்ற கேள்விகளுக்கு விடைத்தேடும் முகமாக சுவாரஸ்யமான கதையுடன் தொடங்கி விறுவிறுப்பைக் கொடுத்திருக்கிறது இந்த ” டெலிவரி பாய் ” என்னும் திரைப்படம்.
திரை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
லியோ சிவகுமார் :-
்்்்்்்்்்்்்்்்்்்
” டெலிவரி பாய் ” நாயகனாக நடித்துள்ள லியோ சிவகுமார் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று மிக சுவாரஸ்யமாக நடித்திருக்கிறார்.
” டெலிவரி பாய் ” என்னும் வேலையில் தொடங்கி தன்னைப் பெற்றெடுத்த தாய் ராதிகா சரத்குமாருக்காக ஓடோடி உழைப்பதும் ப்கிரிடாவிடம் காதலுக்காக காத்திருப்பதும் ஓர் ஆண்மகனுக்கே உண்டான கம்பீரமும் தன் தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணமும் , காதலுக்காக மனத்தில் ஓர் இடத்தில் ஒதுக்கி அதற்காக காத்திருப்பதும் அப்பப்பா நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது. தன்னுடைய பண்பட்ட நடிப்பால் தனி முத்திரையைப் பதிக்கிறார் லியோ சிவகுமார்.
ப்கிரிடா சாகா :-
்்்்்்்்்்்்்்்்
தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று உணர்வு பூர்வமாக நடித்து இருக்கின்றார்.
இராதிகா சரத்குமார் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
தாய் வேடமா கூப்பிடு அந்த இராதிகா சரத்குமாரை. அந்த அளவிற்கு தாய் வேடத்திற்கு பொருத்தமானவர். தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை ஏது ? என்ற இலக்கணத்திற்கு தகுதியானவர்.தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்து படத்திற்கு வலு சேர்த்திருப்பது பாராட்டக் கூடிய விஷயமே அவரை நாம் பாராட்டுவோம் !
இராதிகா சரத்குமார் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
தாய் வேடமா கூப்பிடு அந்த இராதிகா சரத்குமாரை. அந்த அளவிற்கு தாய் வேடத்திற்கு பொருத்தமானவர். தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை ஏது ? என்ற இலக்கணத்திற்கு தகுதியானவர்.தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்து படத்திற்கு வலு சேர்த்திருப்பது பாராட்டக் கூடிய விஷயமே அவரை நாம் பாராட்டுவோம் !
துணை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்
படத்திற்கு பலம் சேர்ப்பவர்கள் இந்த துணை நடிகர்களே !
காளி வெங்கட் , ஜென்சன் திவாகர் , போஸ் வெங்கட் , துஷ்வந்த் , உதயாதீப் இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்
ஒளிப்பதிவாளர்கள் :-
பிரசன்ன S.குமார் மற்றும் அசோக்குமார் ராஜ் .
இயக்குநரின் எண்ணங்களுக்கு திரை வடிவம் கொடுப்பவர் ஒளிப்பதிவாளரே. இந்தப் படத்திற்கு இரண்டு ஒளிப்பதிவாளர்கள் கரம் கோர்த்து சிறப்பாகப் பணியாற்றியிருக்கின்றார்கள்.குறிப்பாக சண்டைக் காட்சியில் தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார்கள்.
இயக்குநரின் எண்ணங்களுக்கு திரை வடிவம் கொடுப்பவர் ஒளிப்பதிவாளரே ! இதில் இருவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். சண்டைக் காட்சியில் தனிக் கவனம் செலுத்தியிருக்கின்றார்கள்.
படத்தொகுப்பு :- ஆர்.வசந்தகுமார் :-
்்்்்்்்்்்்்்்்்்
ஒரு திரைப்படம் எடிட்டரின் மேசையில் உருவாகிறது என்று சொல்வார்கள். படத்தின் வெற்றித் தோல்வி எடிட்டர் கையில் தான் இருக்கிறது. இவர் தனக்கு கொடுக்கபட்டதை நிறைவாக செய்து இருக்கிறார்.
இசை :- K.S.சுந்தர மூர்த்தி.
்்்்்்்்்்்்்்்்்்
இவர் இசையில் உருவான பாடல் செங்காத்தியே மிக அருமையாக உள்ளது. இவரின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பாராட்டலாம்.
எண்ணம்எழுத்து இயக்கம் :-
நானி தர்லா :-
்்்்்்்்்்்்்்்்்்்
நல்லதொரு கதையை தெரிவு செய்து திரைக்கதை அமைத்து அளவாக வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
முதல் பாதியில் கதை வேகமாக நகர்கிறது. காதல் , தேடல் , புரிதல் , நிதிச் சுமை என காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
இரண்டாம் பாதி முதலாம் பாதியை விட விறு விறுப்பாக கதை போகிறது. வில்லன்கள் ஏழு பெயர் பழைய படங்களை நமக்கு நினைவு படுத்துகின்றன. இவர்களை இன்னும் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
இரண்டாம் பாதியில் காட்சிகள் தொடர் வண்டியைப் போல நீளுகின்றன. இவை கிளைமாக்ஸ் காட்சி இதுதான் என கணிக்கத் தூண்டுகிறது. யாரும் வில்லன்களிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்னும் பதற்றம் பார்வையாளர்கள் மனத்திலும் ஏற்படத்தான் செய்கிறது.
இதுவே இந்தப் படத்திற்கு வெற்றி என்று வெளிப்படையாக கூறலாம். படத்தின் இறுதிக் காட்சியில் வழக்கம் போல சண்டைக் காட்சியில் சாத்தியப்படும் விதத்தில் அமைத்திருப்பது வெகு சிறப்பு.
படத்தின் நிறை:-
்்்்்்்்்்்்்்்்
படத்தில் வரும் ஏழு வில்லன்களின் நடிப்பு வெகு சிறப்பு.
எதிர்பார்ப்புகள் எதுவும் பெரிதாக எண்ணாமல் பார்வையாளர்களுக்கு உணர்வுகள் , ஆக்ஷன் கலந்த நடிப்பு இவைகளை ஒன்று சேர்த்து பொழுது போக்கு படமாக எடுத்திருப்பது வெகு சிறப்பு.
படத்தின் குறை :-
்்்்்்்்்்்்்்்்்்
படத்தில் வரும் சில இடங்களில் லாஜிக் மீறல்கள் பார்வையாளர்கள் பார்வைக்கு தென்படுகின்றன. இதனை தவிர்த்திருக்கலாம்.
படத்தின் இறுதிக் காட்சி இது தான் என யூகிக்க முடிகிறது. பதற்றத்தை தக்க வைப்பதில் குறியாக இருந்து இறுதிக் காட்சியில் கோட்டை விட்டிருப்பது சற்று நெருடல் தான்.
இரவுடிகள் கூட்டம் என்று சொன்ன உடன் குப்பம் , காலனி இந்தப் பகுதிகளை எல்லாப் படத்திலும் காட்டுவதைப் போல இந்தப் படத்திலும் காட்டியிருப்பது சற்று நெருடல் தான்.
” டெலிவரி பாய் ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் களம் புகுந்த போது ஏற்பட்ட உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம்.
எந்தவிதப் பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் மழை பெய்கிறதோ அதைப் போல பிரதிபலன் பார்க்காமல் செய்யும் உதவி எப்படி நம்மைக் காக்கும் என்ற கருத்தினை உணர்வு பூர்வமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் இந்தப் படம் வெற்றிப் படமே. எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி வாழ்த்தி விடைபெறுகிறது. மீண்டும் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து பிரியா விடை பெறுபவர் உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட்,ராஜேஷ் ஓகே டேக்