
“ஆகாயத்தில் ஒரு தாரகை ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம்
கதைக் கரு :-
்்்்்்்்்்்்
கல்பனா என்ற இளம் பெண்ணின் சிறு வயது கனவும் அதை அடைவதற்காக அவளது கணவன் நடத்தும் போராட்டமும் தான் இந்தப் படத்தின் கதைக் கரு
கதையும் அதன் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்
வளர்ச்சியே எட்டிப் பார்க்காத ஒரு சிறிய கிராமம். அரசு அதிகாரிகளால் கண்டு கொள்ளப்படாத அந்தக் கிராமத்தில் இருந்து கதை தொடங்குகிறது. ஏன் எதற்கு எப்படி எனக் கேள்விக் கேட்கும் சுட்டிப் பெண்ணான கல்பனா மூலமாக தொடங்கும் இந்தக் கதையில் எதிர்பாராத விதமாக அவளுக்குள் விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் என்ற ஆசை எழுகிறது. ஆசை நிராசை ஆகும் போது மனசு வலிக்கத்தான் செய்யும். ஆமாம் இவள் பத்தாம் வகுப்பு முடித்த கையோடு இவளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்
நிலவை நேரில் பார்க்க வேண்டும் ; நட்சத்திரங்களையும் நேரில் பார்க்க வேண்டும் என்ற அவளது ஆசை அதோடு முடிந்து விட்டது என நினைக்கும் பொழுது அவளது கனவை நினைவாக்க கரம் பிடித்தவன் முன் வருகின்றான். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது ? கல்பனாவின் ஆசை நிறைவேறியதா ? என்ற கேள்விகளுக்கு விடை தேட முயல்கிறது ஆகாயத்தில் ஒரு தாரகை .
திரை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்்
துல்கர் சல்மான் :-
்்்்்்்்்்்்்்்்்
அக்காவின் அரவணைப்பில் வளர்கிறார். பின்னர் மனைவி மீது அளவு கடந்த பாசத்தை பொழிகிறார். மனைவியின் சந்தோஷத்திற்காகத் தியாகம் செய்யும் ஒரு யதார்த்தமான மனிதனாகவும் வலம் வருகிறார் துல்கர் சல்மான். எமோஷனல் காட்சிகளில் பார்வையாளர்களை கண் கலங்க வைக்கிறார் துல்கர் சல்மான்.
சாத்விகா வீரவல்லி :-
்்்்்்்்்்்்்்்்்்்்
இவர் கல்பனா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கிறார். இதில் இவர் ஓர் அறிமுகம். எந்தவிதமான தயக்கமும் இன்றி இந்தச் சமூகம் விதிக்கும் எல்லைகளைத் தாண்டி தன் கனவுகளை நோக்கி முன்னேறத் துடிக்கும் ஓர் இலட்சியப் பெண்ணாக தன் நடிப்பால் முதல் படத்திலேயே தனி முத்திரையைப் பதிக்கிறார். இவருக்கு வளமான எதிர் காலம் உண்டு.
துணை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்்
சரஸ்வதியாக ஸ்வாசிகா , ரோகிணியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்கள். பெற்றோராக நடித்தவர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
எமோஷனல் காட்சிகளில் பார்வையாளர்கள் மனத்தைத் தொடும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்்
திரைக்கதையில் ஒரு புதுமை :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமே திரைக்கதை தான். ஆரம்பம் முதல் இறுதி வரை சற்றும் தொய்வில்லாமல் , எமோஷன் , த்ர்ல்லிங் கலந்து ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை படத்தோடு ஒன்ற வைக்கிறது இந்தத் திரைக்கதை. இதனை எழுதியவர்கள் :- குன்னம் கங்கராஜூ , வசந்த் ஜூரு
இசை :- ஜி.வி. பிரகாஷ்
்்்்்்்்்்்்்்்்்்்்
இந்தப் படத்திற்கு இவர் இசையமைத்து இருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்
இயக்கம் :- பவன் சத்தினி
்்்்்்்்்்்்்்்்
மொத்தமே 36 கதைக் கரு தான்.யார் எடுத்தாலும் இந்த 36 கதைக் கருக்குள் தான் எல்லாம் அடங்கி இருக்கு. இயக்குநரின் வித்தியாசமான முயற்சி பாராட்டுகள். படத்தை நேர்த்தியாக கொண்டு செல்கிறார். குழந்தைகளின் ஆசைகளை பெற்றோர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்கள் வளர்ந்த பிறகு பெண்ணாக இருந்தால் கணவன் பூர்த்தி செய்ய வேண்டும். நாயகியின் ஆசையை நாயகன் நிறைவேற்றி வைக்கின்றானா ? என்பதை தனக்கே உரிய பணியில் இயக்குநர் பதில் சொல்லியிருக்கிறார்.
” ஆகாயத்தில் ஒரு தாரகை ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் செய்ததில் படம் நல்லாவே இருக்கு. இளமையில் கனவு காணுங்கள்.அதுவே முயற்சி செய்தால் நினைவாக மாறும். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்குகிறது. மீண்டும் சந்திப்போம். உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் .ராஜேஷ் ஓகே டேக்