நியூஸ் 18 தமிழ்நாடு- ன் ‘கற்றல் விருதுகள்’

Share the post

நியூஸ் 18 தமிழ்நாடு- ன் ‘கற்றல் விருதுகள்’

கல்வி …ஒருவருக்கு நம்பிக்கையை விதைக்கிறது…நம்பிக்கை வெற்றியை ஈட்டுகிறது… வெற்றி புதிய சாதனைக்கு வித்திடுகிறது… சாதனையாளர்கள் வராற்றின் பக்கங்களை நிரப்புகின்றனர். வரலாறு வரும் தலைமுறையினருக்கு பாடமாகிறது… அத்தகைய பாடங்களை பயிற்றுவிக்கும் மையங்கள் கல்விச் சேவையில் தனி முத்திரை பதிக்கிறது…

கல்வி என்பது அதிகாரத்திற்கான இடம் இல்லை. அறிவைப் பெறுவதற்கான இடம்…. மனிதர்களைப் பண்படுத்தி, அவர்களை நாகரிகமானவர்களாக மாற்றும் கல்வி மையங்கள் போற்றுதலுக்குரியவை. அத்தகைய கல்விச் சேவையை வழங்கும் கற்றல் மையங்களை அடையாளப்படுத்துவதில் பெருமை கொள்கிறது தமிழ்நாட்டின் முன்னணி செய்தித் தொலைக்காட்சிகளில் ஒன்றான ‘நியூஸ்18 தமிழ்நாடு’

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான நியூஸ் நெட்வொர்க் குழுமம் நியூஸ்18-ன் ஓர் அங்கமான நியூஸ் 18 தமிழ்நாடு ‘கற்றல் விருதுகள்’ என்ற பெயரில் விருது விழா நடத்தி, கலைச்சேவை புரியும் கல்வி நிறுவனங்களை கவுரவிக்க காத்திருக்கிறது. 

நடுவர் குழு : கற்றல் விருதாளர்களைத் தேர்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்படும். அவரவர் துறைகளில் ஆளுமை செலுத்தக் கூடிய பிரபலங்கள் நடுவர்களாக இடம்பெறுவர். இவர்களே விருதுக்கு விண்ணப்பித்தவர்களைத் தேர்வு செய்து வெற்றியாளர்களை இறுதி செய்வர், இந்த குழுவில் நியூஸ்18 குழுமத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெற மாட்டார்கள் 

இந்த மொத்த தேர்வும் சுயேச்சையானதாக; வெளிப்படையானதாக நடைபெறும். அதில், நடுவர்களின் முடிவே இறுதியானதாக இருக்கும். 

பிரிவுகள்: கல்வித்துறையில் புதிய கண்டுபிடிப்புகள், அறியில் மற்றும் தொழில்நுட்பம், ஊரகப் பகுதியில் சிறந்த கல்விச் சேவை, அதிக வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் கல்வி மையம், அடிப்படை கட்டமைப்பில் சிறந்த கல்வி மையம், பொறியியல் படிப்பில் சிறந்து விளக்கும் பல்கலை, ஆன்லைன் கல்வி, பாலின பாகுபாடற்ற கல்வி வளாகம், சிறந்த தொழிற்பயிற்சி போன்ற பிரிவுகளில் விருதாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விருதுக்கு விண்ணப்பிப்போர் Katralawards@nw18.com  என்ற பிரத்யேக மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் கல்வி நிறுவனம்/மையம் குறித்த விரிவான விவரங்கள் மற்றும் பொருத்தமான ஆவணங்களை அனுப்பி வைக்கலாம். இப்படி வந்து சேரும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வெற்றி விருதாளர்கள் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 07-11-21 அதற்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது

டிசம்பர் மாதம் நடைபெறும் பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *