” அப்பா குட்டி “திரை விமர்சனம் :-

Share the post

” அப்பா குட்டி ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்
கதைக் கரு :-
அப்பா – மகளுக்கு இடையே உள்ள பாசப் பிணைப்பே இந்தப் படத்தின் கதைக் கரு .

கதையும் அதன் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
பொதுவாக அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்காதவர்களே இந்த உலகத்தில் இல்லை என்று ஆணித் தரமாகச் சொல்லலாம்.

மனைவியை இழந்தவர் இந்தப் படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி. தன் மகளுடன் ஊட்டியில் வசித்து வருகின்றார். அவருடைய மகள் படிக்கும் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார் பிரித்திஅஸ்ராணி .
விஜய் ஆண்டனி தன் மகளை பள்ளிக்கு கொண்டு வந்து விடும்போது பார்வையால் மோதும் பிரித்தி அஸ்ராணி ஒருதலையாக விஜய் ஆண்டனியைக் காதலிக்கிறார். அதுமட்டும் இன்றி அவரது மகள் மீது அளவு கடந்த பாசத்தையும் , அதிக அக்கறையும் காட்டுகிறார்.

இதற்கிடையில் , விஜய் ஆண்டனி இறந்ததாக சொல்லும் அவரது மனைவியை உண்மையாகவே ஊட்டியில் பார்த்து விடுகிறார் பிரித்தி அஸ்ராணி . விஜய் ஆண்டனி சொல்லும் அந்தப் பெண்மணி தன் கணவர் மற்றும் குழந்தையோடு இருப்பதைப் பார்த்து விட்டு அதை விஜய் ஆண்டனியிடம் வந்து சொல்கிறார் பிரித்தி அஸ்ராணி. குழந்தையிடம் பொய் சொன்னதற்காக வருத்தப்படுகிறார்.

இந்த நிலையில் தான் விஜய் ஆண்டனியின் மகளுக்கு திடீரென உடல்நிலைக் குறைவு ஏற்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்கின்றனர். மருத்துவ பரிசோதனையில் மருத்துவர்கள் ஒட்டு மொத்தமாக தங்களுடைய பதிலை விஜய் ஆண்டனியிடம் சொல்கின்றனர்.

மரபணு இரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுமியின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் ஒன்று கூடி சொல்ல . அதற்கான தீர்வையும் மருத்துவர்களே சொல்கின்றனர்.

அந்தச் சிறுமிக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை ( எலும்பின் உட் திசு ) ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அந்தச் சிறுமியைக் காப்பாற்ற முடியும் என்று சொல்கின்றனர் மருத்துவர்கள்.

உண்மை ஒன்று சொல்வேன் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்் இப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜய் ஆண்டனியும் அவரது மனைவியும் இணைந்து இல்லற வாழ்வில் கலந்து குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்பொழுது தான் ஓர் உண்மைப் புலப்படுகிறது. உண்மையில் விஜய் ஆண்டனிக்கு திருமணம் ஆகவில்லை. அதுமட்டுமல்ல இந்தச் சிறுமி ஓர் அனாதை. ஆதரவு அற்றக் குழந்தை. அதனால் விஜய் ஆண்டனி இந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறார்.

இந்தச் சிறுமியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் , அவரது உண்மையான பெற்றோர்கள் நினைத்தால் மட்டுமே முடியும். அவர்கள் யார் ? அவர்களை எங்கு போய் தேடுவது ? இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களைத் தேடி செல்லும் விஜய் ஆண்டனி . அவர்கள் கிடைத்தார்களா ? வளர்ப்பு மகளை விஜய் ஆண்டனி காப்பாற்றினாரா ? திருமணமே ஆகாத விஜய் எப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் குழந்தையைப் பார்த்தார் ? ஆதரவு அற்ற அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தாரா ? இறந்து போன மனைவி என்று சொன்னாரே விஜய் ஆண்டனி . அப்படி என்றால் அந்த மனைவி யார் ? இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை முன் நிறுத்தினால் விடைகளை எப்படிக் கண்டுப்பிடிப்பது ? படத்தை மட்டும் பார்த்தால் தான் உண்மை புரியும்.

திரை நட்சத்திரங்கள் :-
விஜய் ஆண்டனி :-
்்்்்்்்்்்்்்.்்்்
விஜய் ஆண்டனி கைதேர்ந்த இசையமைப்பாளர் . அதுமட்டுமல்ல ஒரு நல்ல நடிகர். இந்தப் படத்தில் படத்தொகுப்பு வேலையும் செய்து இருக்கிறார்.

கதை நாயகனாக நடித்து இருக்கும் விஜய் ஆண்டனி வழக்கம் போல தன்னுடைய அமைதியான நடிப்பால் பாவப்பட்ட மனிதராக வலம் வருகின்றார்.தன் மகள் மீது அவர் வைத்து இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட காட்சிகள் இயல்பாக இல்லை என்பது வருந்தத் தக்கது. விஜய் ஆண்டனி எல்லாப் படங்களிலும் இயல்பாக நடித்திருப்பார் ஏனோ தெரியவில்லை இந்தப் படத்தில் அவருடைய நடிப்பில் செயற்கைத் தனம் தெரிகிறது.

பிரித்தி அஸ்ராணி :-
்்்்்்்்்்்்்்்்்்்
பள்ளி ஆசிரியையாக நடித்திருப்பவர் பிரித்தி அஸ்ராணி. இவருக்கு விஜய் ஆண்டனி மீது காதல் வருகிறது. அதுவும் ஒரு தலைக் காதலாக. அது அழுத்தமாக கதையில் சொல்லப்படவில்லை. இன்னொன்று அந்தச் சிறுமி மீது அக்கறை செலுத்துவதும் , பாசத்தைப் பொழிவதும் வலுவாக இல்லை. இதனால் பிரித்தி அஸ்ராணி நடிப்பு எடுபடவில்லை. இதை இயக்குநர் சற்று கவனித்து இருக்கலாம்.

சிறுமி லிதன்யா :-
்்்்்்்்்்்்்்்்்்
சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை. குழந்தைக்கு எதைக் கற்றுக் கொடுத்தாலும் அதை அப்படியே செய்து காட்டுமாம். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி லிதன்யா தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் , சுட்டித் தனத்தாலும் , குறும்புத்தனமான பேச்சாலும் பார்வையாளர்கள் மனத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்தச் சிறுமியின் நடிப்பு படத்தின் உச்சக் காட்சியில் ( கிளைமாக்ஸ்ஸில் ) அந்தச் சிறுமியின் சுமார் இரண்டு நிமிடக் காட்சி ஒன்று மட்டுமே ஒட்டு மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிறது.

துணை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்
வாழ்க்கைக்கு வருவாள் மனைவி. திரைக்கு துணையாக நிற்பார்கள் இந்தத் துணை நட்சத்திரங்கள்.

பகவதி பெருமாள் , முத்துக் குமார் , அருவி மதன் , ஹரிப்பிரியா இசை ,ஸ்ரீஜா ரவி , குமார் நடராஜன் , பிரவீனா , லிஸி ஆண்டனி , சித்ரா லட்சுமணன் , மூணாறு ரமேஷ் , ஜென்சன் திவாகர் , ஹரிதா , முத்தரசன் , முருகாந்தம் .ஆர். ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்்
ஒளிப்பதிவாளர் :- ராஜீவ் ராஜேந்திரன் :-
்்்்்்்்்.்்்்்்்்்்
இயக்குநரின் எண்ணங்களை திரை வடிவில் கொண்டு வருவது ஒளிப்பதிவாளரின் வேலை. அந்த வகையில் காட்சிகளை அழகாக படத்தில் காட்டியிருக்கின்றார். கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு அதிக சிரத்தை எடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இசை :- விஜய் ஆண்டனி :-
்்்்்்்்்்்்்்் ்
விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக் களத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றன. குறிப்பாக அப்பா எனத் தொடங்கும் பாடல் மனத்தை தொட்டப் பாடல். கண்களை குளமாக்கிய பாடல். பின்னணி இசையும் கதைக்கு இடையூறு விளைவிக்காமல் அளவாக பயணித்திருப்பது காட்சிகளுக்கு உயிர் ஊட்டியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

படத்தொகுப்பு :- விஜய் ஆண்டனி :-
்்்்்்்்்்்்்்்்் ்்்
இவர் பன்முக வித்தகர் என்றே சொல்லலாம். நேர்த்தியாக காட்சிகளைத் தொகுத்து இருக்கிறார். இயக்குநரின் கதையை சிதைக்காமல் மிக இலாவகமாக படத்தொகுப்பு செய்து அசத்தி இருக்கிறார்.

இயக்கம் :- மு.மாறன்.
்்்்்்்்்்்்்்்்்்்
இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்தவர் . எழுதி இயக்கி இருக்கிறார் மருத்துவ துறையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக சொல்லியிருக்கிறார்.

ஒரு காலத்தில் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்காக குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து செல்கள் பெறப்பட்டன. ஆனால் கால ஓட்டத்தினாலும் , விஞ்ஞான வளர்ச்சியினாலும் மருத்துவதுறையில் அசுர வேகத்தில் முன்னேற்றம் கண்ட இந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொருத்தமான நன்கொடையாளரிடமிருந்து ஸ்டெம் செல்கள் பெறப்படுகிறது. இதற்காக சில தனியார் அமைப்புகள் ஸ்டெம் செல் வங்கிகளையும் நடத்தி வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது மருத்துவத்தில் பழங்கதையை புகுத்துவதும் கதைக்கு பொருத்தம் இல்லாததை சொல்வதும் அபத்தம் தான்.

அப்பா குட்டி என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஆய்வு செய்தபோது சில உண்மைகள் சினிமாக்காரர்களுக்கு சொல்ல வேண்டியது நம் கடமையாகும். மருத்துவத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பிறகு படம் எடுங்கள். படம் பார்க்கலாம் . எங்களின் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம். ஏ ; பி.எட் .ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *