
” சத்தியவான் சாவித்திரி ” என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்
கதைக் கரு :-
்்்்்்்்்்்்்்
எமனிடம் வாதாடி தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியைப் போல செய்யாத கொலைக்கு தன் கணவனை குற்றவாளியாக்கி சிறைக்குத் தள்ளியதை நிரபராதி எனக் கூறி மீட்டெடுத்த சாவித்திரி கதை .
கதையின் போக்கு :-
்்்்்்்்்்்்்்்்்்்்
சட்டம் படித்து முடிக்கிறாள் கீர்த்தி சுரேஷ். சாருகேஷை திருமணம் செய்து கொண்டு , சென்னையில் உள்ள பிரபல வழக்குரைஞர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார்.
தனது குருவான மிஷ்கினுக்கு எதிராக வழக்கு ஒன்றில் வாதாடி வெற்றிப் பெறுகிறாள் கீர்த்தி சுரேஷ்.
தன்னை யாராலும் வீழ்த்த முடியாது என நினைத்துக் கொண்டிருந்த மிஷ்கினுக்கு மரண அடி , முதல் தோல்வி .
யாராலும் வீழ்த்த முடியாத மிஷ்கினை முதல் வழக்கிலேயே வீழ்த்தியதால் வழக்குரைஞராகவும் பிரபலமடைகிறாள் கீர்த்தி சுரேஷ். இதற்கிடையில் கரு உற்று இருந்த கீர்த்தி சுரேஷுக்கு திடீரென்று ஏற்படும் உடல் நல பாதிப்பால் கருச் சிதைவு ஏற்படுகிறது. இதனால் உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறாள்.
வழக்குரைஞர் பணியை கைவிட முடிவு செய்கிறார் கீர்த்தி சுரேஷ். மீண்டும் தாய்மை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். இல்லத்தரசியாக முழுமையாகவே மாறி விடுகிறார்.
இந்த நிலையில் ஷில்பா மஞ்சுநாத் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலை சம்பந்தப்பட்ட வழக்கில் கீர்த்தி சுரேஷின் கணவர் சாருகேஷ் கைது செய்யப்படுகிறார். செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளான தன் கணவரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற மீண்டும் வழக்குரைஞராக களம் இறங்குகிறார் கீர்த்தி சுரேஷ்.
இவரிடம் தோல்வியடைந்த பிரபல வழக்குரைஞர் மிஷ்கின் இவரைப் பழிவாங்கும் நோக்கத்தோடு அரசு வழக்குரைஞராக களம் இறங்குகிறார்
கணவரை காப்பாற்றுவதற்காக மனைவியாக மட்டும் இன்றி வழக்குரைஞராகவும் போராடும் கீர்த்தி சுரேஷ் மிஷ்கினை எதிர்த்து மீண்டும் வெற்றிப் பெற்றாரா ? தன் கணவர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்திலிருந்து அவரைக் காப்பாற்றினாரா ? என்ற கேள்விகளுக்கு புதிய வழியின் மூலம் சொல்வதே மீதிக் கதை.
திரை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
இந்தப் படத்தின் கதை நாயகி கீர்த்தி சுரேஷ். சாவித்திரி என்ற கதாபாத்திரத்தை ஏற்று வழக்குரைஞராக நடித்திருக்கும் இவர் நீதிமன்றத்தில் கடவுள் பிராத்தினையை பாட்டாக சொல்லி ஆரம்பித்திருப்பது அருமை.
தன் கணவரின் உயிரைக் காப்பாற்றப் போராடும் ஒரு மனைவியின் தவிப்பும் ஒரு நிரபராதியை தண்டிக்கக் கூடாது என்ற துடிப்பும் தன்னுடைய யதார்த்தமான உடல்மொழி மூலம் ஒரு வழக்குரைஞரின் மன உறுதியையும் தன் கண்கள் மூலமாக வெளிப்படுத்தி தன் நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார். உண்மையில் இவர் நடிகையின் நடிகை என்பதை நிருபித்து இருக்கிறார் . முகத்தில் ஒரு வசிகரம் . நடிப்பில் ஒரு சிகரம் . இவரை பாராட்டுவோம்.
சாருகேஷ் :-
்்்்்்்்்்்்்
இப் படத்தின் நாயகன் . கீர்த்தி சுரேஷின் கணவன் என்ற அறிமுகத்தோடு அறிமுகமாகும் இவர் காதல் உணர்வை வெளிப்படுத்த தவறியது இல்லை. அதே போன்று செய்யாதக் குற்றத்திற்காக அனுபவிக்கும் தண்டனையால் இதனால் ஏற்பட்ட தவிப்பும் மன உளைச்சலும் மிகவும் நேர்த்தியாக தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
மிஷ்கின் :-
்்்்்்்்்்
இப்பொழுது எல்லாம் திரைப்பட இயக்குநர்களே நடிகர்களாக வலம் வர ஆரம்பித்து விட்டார்கள். அந்த வரிசையில் மிஷ்கினும் நடிகராக வலம் வர ஆரம்பித்து விட்டார்.
மூத்த மற்றும் பிரபல வழக்குரைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் தனது முதிர்ச்சியான நடிப்பு மூலம் வித்தியாசமான மேனரிசம் மூலம் பார்வையாளர்களை தனது தேர்ந்தெடுக்கப்பட்ட நடிப்பால் கவர்ந்து இழுத்திருக்கிறார். நீதி மன்றக் காட்சிகளில் தனது ஒவ்வொரு அசைவுகளையும் உற்று நோக்க வைக்கிறார்.
சிரிப்பு மன்னன் பாலசரவணன் :-
்்்்்்்்்்்்்்்்
இவர் சிரிப்பு நடிகர் பட்டியலில் சேர்ந்து வலம் வர தொடங்கியிருக்கிறார். இவர் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷின் சீனியராகவும் , பிறகு அவரது உதவியாளராகவும் பயணிக்கிறார். இறுக்கமான சூழ்நிலைகளை கடந்து பார்வையாளர்களை அடிக்கடி சிரிக்க வைத்து ,சிந்திக்கவும் வைக்கிறார் . இவரை நாமும் பாராட்டலாமே !
துணை நட்சத்திரங்கள் :-
ஒரு படத்திற்கு வைரத் தூண்களாக இருப்பவர்கள் இந்த துணை கதாபாத்திரங்களை முகம் சுழிக்காமல் ஏற்று படத்திற்கு பட்டைத் தீட்டுபவர்களும் இவர்களே ! அந்த வரிசையில் இந்தப் படத்தில் பயணிப்பவர்கள் :- ஷில்பா மஞ்சுநாத் , பிரிகிடா சாகா , தீபா சங்கர் , மதுசூதனராவ் , மாலா பார்வதி , ஏ.வெங்கடேஷ் , ஆர். சுந்தர்ராஜன் ….. இவர்கள் அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துக் கொடுத்து இருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்்
ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்்
இயக்குநரின் எண்ணங்களை திரைவடிவில் தன்னுடைய ஒளிப்பதிவால் திரைப்படமாக கொண்டு வருபவர்.
நீதிமன்றக் காட்சிகளில் கையாண்ட விதமும் , கோணங்களும் , ஒளியமைப்பும் படத்தின் விறு விறுப்பைக் கூட்டி மெருகேற்றி உள்ளன. கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் ஆகியோரின் நேருக்கு நேரான வாதங்களின் போது ஏற்படும் இறுக்கமும் , த்ரில்லர் உணர்வும் இவையாவும் தன்னுடைய கைதேர்ந்த ஒளிப்பதிவால் மிக நேர்த்தியாக பார்வையாளர்கள் மனத்தை தொடுகிறார் தன்னுடைய ஒளிப்பதிவால்.அது மட்டுமல்ல கதாபாத்திரங்களின் மனப் போராட்டங்களையும் , புலனாய்வுத் திருப்பங்களையும் அழுத்தமாக மிக அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார். இவரை நாம் பாராட்டலாமே !
இசை :- சாம். சி.எஸ்.
்்்்்்்்்்்்்்்்்்்்
இவர் இசையில் உருவான பாடல்கள் மிக அருமை . ஆனால் மனத்தில் நிற்கவில்லையே ! மீண்டும் பழைய பாடல்கள் முறையை இன்றும் கொண்டு வரலாமே !
பின்னணி இசையில் வேகமும் உண்டு , விவேகமும் உண்டு.
படத்தொகுப்பு :- பிரசன்னா ஜி.கே
்்்்்்்்்்்்்்்்
கதையின் தொடக்கம் முதலே யூகிக்கும்படியும் , நம்பகத் தன்மையின்றியும் காட்சிகள் நகர்ந்தாலும் திரைக்கதையில் இருக்கும் திருப்பத்தை எதிர்பார்க்காத தருணத்தில் , சரியான இடத்தில் சொல்லி முழுப் படத்தையும் பார்வையாளர்கள் இரசிக்கும்படி கொண்டாட வைத்திருக்கிறார் .
இயக்குநர் :- பிரவீன் எஸ்.விஜய் :-
்்்்்்்்்்்்்்்்
பழைய மொந்தையில் புதிய கள்ளு என்று சொல்வார் அனுபவப் பட்டவர்கள். புராண கதையை கையில் எடுத்துக் கொண்டு அப்படியே கதையை மாற்றி படமாக எடுத்து இருக்கிறார். இந்த உண்மை புராணம் படித்தவர்களுக்கும் , வரலாறு படித்தவர்களுக்கும் நிச்சயமாக தெரிந்து இருக்கும். இதற்குக் காரணம் கதை பற்றாக் குறையே !
இவர் எழுதி இயக்கியும் இருக்கின்றார். நீதிமன்ற வாதங்கள் கொண்ட கதைக் களம் இது. கிரைம் , த்ரில்லர் , சஸ்பென்ஸ் முடிச்சையும் படத்தின் முடிவில் அவிழ்த்திருப்பது கதைக்கு புதிய வடிவத்தை கொடுத்து இருக்கிறது.
படத்தின் முதல் பாதியும் இதில் கீர்த்தி சுரேஷின் வாதத் திறமையும் சினிமாத் தன்மை , நாடகத் தன்மை கலந்து இருந்தாலும் இரண்டாம் பாதியில் கொலை வழக்கின் தீர்ப்பு பின்னணியில் இருக்கும் திருப்பத்தை மிக சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்கள் கவனத்தை தன் பக்கம் இழுத்து இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் . இவரை வெகுவாக பாராட்டலாமே !
சத்தியவான் சாவித்திரி :-
்்்்்்்்்்்்்்
திரைப்பட திரைவிமர்சனம் இதில் களம் புகுந்ததில் நாடகத் தன்மை இருந்தாலும் , சினிமாத்தன்மை இருந்தாலும் மிக அருமையான படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம் . எங்களின் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பினை வழங்கியுள்ளது . மீண்டும் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட், ராஜேஷ் ஓகே டேக்