
” ஜான் டோ ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்்்
கதைக் கரு :-
்்்்்்்்்்்்்்்்
கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு மலைப்பகுதியில் ஆரம்பமாகிறது கதையின் தொடக்கம். தாயை இழந்த சிறுமி சாரா . இவளின் தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த சிறுவன் ஹிருதய் குடும்பத்துடன் இந்தியா வருகின்றனர். திடீரென ஹிருதய் காணாமல் போகிறான்.இதனால் பதற்றம்.
அடையாளம் காண முடியாத ஒருவரின் மர்ம வழக்கை விசாரிப்பதற்காக தமிழகம் வருகிறார். தமிழகம் வந்த அர்ஜூன் தாஸ்ஸுக்கு ஒரு விசாரணை காத்திருக்கிறது. இவர் விசாரிக்க வந்த வழக்குக்கும் காணாமல் போன ஹிருதய்க்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக தெரிய வருகின்றது.
இதற்கிடையில் ஹிருதய் வழக்கை விசாரித்து வரும் பெண் காவல் அதிகாரி ராவ் ( சஞ்சனா நடராசன் ) உடன் இணைந்து விசாரணையை முன் நடத்த வருகின்றார் அர்ஜுன் தாஸ்.
இந்த வழக்கினை விசாரணை செய்கின்ற பொழுது சிறுவர்களின் மேலே உள்ள பற்களுக்கு இடையே காணப்படும் இடைவெளி ஒரு முக்கியமான அடையாளமாக மாறுகிறது.
ஒரு கட்டத்தில் காணாமல் போன ஹிருதய் உயிருடன் மீட்கப்படுகிறான். ஆனால் அவனுடைய நடவடிக்கைகள் யாவும் முற்றிலும் மாறி விடுகின்றன. தனது பெயரையே மறந்து விடுகிறான் அந்தச் சிறுவன். தன்னுடைய உண்மையான பெயரையே மறந்து போன அந்தச் சிறுவன் தன்னை கேபிரியேல் என அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அதுமட்டுமல்ல அவனது கையில் ” ஏஞ்சல் ” என்ற பெயர் பொறிக்கப்பட்ட தங்கக் கையணியும் இருக்கிறது.
இந்தக் குழந்தைகள் கடத்தலின் பின்னணி என்ன ? கடத்தியவர்கள் யார் யார் ? ஹிருதயின் பெயரும் அடையாளமும் மாறிப் போனதிற்கான மர்மம் என்ன ? இந்தக் கேள்விகளுக்கு விடையைத் தேடி பயணமாகிறது இந்தப் படத்தின் மீதிக் கதை .
படத்தின் பலமும் சுவாரசியமும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
படத்தின் முக்கிய பலமே குழந்தைகள் கடத்தல் என்ற பதற்றமான களத்துடன் , அடையாளம் தெரியாத நபரின் மர்மத்தையும் இணைத்திருப்பது
படத்தின் தொடக்கத்திலேயே சந்தேகங்களை விதைக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர். அவற்றுக்கான காரண காரியங்களை எடுத்துக் கூறி பதில்களை பதற்றப்படாமல் ஒவ்வொன்றாக வெளிப்படுத்துகிறார்.
குறிப்பாக கூற வேண்டும் என்றால் இடைவேளையில் வரும் திருப்பம். இதன் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கிறது. இரண்டாம் பாதியிலும் விசாரணையின் வேகம் குறையவில்லை. அடுத்து என்ன ? அடுத்து என்ன ? எனக் கேட்கத் தோன்றுகிறது.
திரை நட்சத்திரங்கள் :-
அர்ஜூன் தாஸ் தனக்கே உரித்தான கம்பீரமான குரலும் , திரையில் தோன்றி அவர் வெளிப்படுத்தும் உடல் மொழியும் காவல் அதிகாரிக்கு உண்டான கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளன.விசாரணை காட்சிகளில் அவரது நடிப்புத் திறன் மிளிர்கிறது.
சஞ்சனா நடராசன் பெண் காவல் அதிகாரியாக வருகிறார். தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது அருமை.நடிப்பில் குறையில்லை. ஒவ்வொரு காட்சியிலும் காவல் துறைக்கே உரித்தான கம்பீரம் குறையாமல் மற்றவர்களை அதட்டி பேசுவது சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகத் தோன்றுகிறது. அதைக் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.
சிறுவன் நீரவ் ஹிருதயா கதா பாத்திரத்தில் தனது நடிப்புத் திறனைக் காட்டி பார்வையாளர்களை தம் பக்கம் இழுத்துக் கொள்கிறார்.
துணை நட்சத்திரங்கள் :-
அனுபமா , ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நடிகர் நடிகையர் தமக்கு கொடுக்கப்பட்ட கதா பாத்திரங்களை ஏற்று உணர்ந்து தத்தம் நடிப்புத் திறனை வெளிக்காட்டுவதில் குறை ஒன்றும் வைக்கவில்லை.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்
இயக்கம் :- மதுமிதா. இவரின் கைவண்ணத்தை இந்தப் படத்தில் காணலாம். இவர் வைக்கும் காட்சியமைப்பும் , ஒவ்வொரு காட்சிக்கும் அவர் தேர்ந்தெடுக்கும் ஃபிரேம்களும் பாராட்டுக்குரியவை
.
குறை ஒன்றைக் கண்டேன் :-
்்்்்்்்்்்்்்்்்்்
படம் முழுவதும் ஒவ்வொரு மர்மத்திற்கும் ஒரு காரணத்தைத் தேடித் தேடி வெளிப்படுத்தும் இயக்குநர் கிளைமாக்ஸில் மட்டும் தடுமாற்றம் ஏனோ ?
குடும்பத்தில் மனைவி , மகன் என இருவரின் உயிரும் ஒரே நேரத்தில் ஆபத்தில் இருக்கும் பொழுது யாரைக் காப்பாற்றுவது என்ற சூழ்நிலையில் ஒரு கதாபாத்திரம் எடுக்கும் முடிவு பார்வையாளர்களின் மனத்தை குழப்புகிறது.
எந்த தவறும் செய்யாத குழந்தை ஒன்றின் உயிரைப் பொருட்படுத்தாமல் எடுக்கப்படும் அந்த முடிவுக்குப் பின்னால் வலுவான உளவியல் காரணம் இருந்திருக்க வேண்டும் ஆனால் அதில் கோட்டை விட்டு விட்டார் இந்தப் படத்தின் இயக்குநர்.
ஒரு கதாபாத்திரத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என சித்தரித்துவிட்டால் போதுமா ? அந்த மனநிலை பாதிப்புக்கான காரணமும் அதன் பின்னணியும் அத்தகைய கொடூரமான முடிவை எடுக்கத் தூண்டும் காரணிகளும் திரைக்கதையில் அழுத்தமாக பதிவு செய்து இருக்க வேண்டும். இதிலும் கோட்டை விட்டு விட்டார்.
ஒளிப்பதிவு :- ப்ரீத்தி ஜெயராமன். இயக்குநரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பவர் ஒளிப்பதிவாளர். மலைப்பகுதியின் இயற்கை அழகை படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். அதுமட்டும் அல்லாமல் , அங்கு நிலவும் ஒருவித அச்ச உணர்வையும் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் ஒளிப்பதிவாளர்.
முஜீப் மஜீத் மற்றும் ஆர்டிஸ்ட் 404 ஆகியோரின் பின்னணி இசை விசாரணைக் காட்சிகளுக்கு பதற்றத்தைக் கூட்டுகிறது. இரத்தத்தை உறைய வைக்கிறது.
படத்தொகுப்பு :- விஜய் வெங்கட் ரமணன் . இவரது பணி ஒட்டு மொத்தமாக சிறப்பாக இருந்தாலும் முதல் பாதியில் சில காட்சிகளை சுருக்கியிருக்கலாம்.
ஜான் டோ என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஆய்வு செய்த போது படம் அருமை. சில சில குறைகளைத் தவிர படத்தில் மன நிறைவான காட்சிகள் மனத்திற்கு சுகத்தை தருகின்றன. எங்களின் பத்திரிகை குழு நடுநிலையோடு நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி சிறப்பித்து இருக்கிறது. மீண்டும் சந்திப்போம். உங்கள் தோழன் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட்,ராஜேஷ் ஓகே டேக்