
டைட்டானிக் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :-
்்்்்்்்்்்்்்்
சங்க காலத்தில் தொடங்கி தற் காலம் வரை தொடர்ந்து வரும் இந்த மானுட காதல் மானுடத்தை உயர்த்தும். மனித வாழ்வில் வந்து போகும் இந்தக் காதல் ஒவ்வொரு வாழ்க்கையிலும் ரங்க ராட்டினமாக மேலும் கீழும் சுற்றும். ஏற்றம் இறக்கம் இன்பம் துன்பம் மாறி மாறி வரும் இந்தக் காதல் எத்தனை பேர் வாழ்க்கையில் நிலைத்து நிற்கும் ? கேள்விக் குறி .
கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்்சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் இரயில் பயணத்தில் சந்திக்கும் மூன்று ஆண்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் அனுபவங்கள் , அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் . நகைச்சுவை உணர்வோடு சொல்ல துடிக்கும் திரைப்படம் இந்த டைட்டானிக். இதுவும் கடந்து போகும் இந்தக் காதலும் கவிழ்ந்து போகும்.
திருமணத்திற்குத் தயாராகும் சந்துரு. இரயில் பயணத்தின் போது பூமிநாதன் மற்றும் சூரியா இவர்களை இரயிலில் சந்திக்கின்றான். மூவரும் இரயில் சினேகிதர்கள் என்ற தனி முத்திரையோடு பயணிக்கின்றனர். மூவரும் தங்களுக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டது இவர்களது வாழ்க்கை. இதில் குழப்பங்களும் உண்டு நகைச்சுவை சம்பவங்களும் உண்டு.இது தான் இந்தப் படத்தின் மீதிக் கதை.
திரை நட்சத்திரங்கள் :-
கலையரசன் சந்துரு கதாபாத்திரத்தில் தனிக் கவனம் செலுத்தி பார்வையாளர்களை தன் வசம் கவர்ந்து இழுக்கின்றார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஆனந்தி , அஷ்னா சவேரிஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தங்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
காளி வெங்கட் வரும் நகைச்சுவை காட்சிகள் பார்வையாளர்களை தன் வசம் கவர்ந்து இழுக்கிறார்.
என்று தான் சொல்ல வேண்டும்.
ராகவ் விஜய் , மதுமிதா ,சேத்தன் , தேவதர்ஷினி முதலானோர் நடித்து இருக்கிறார்கள்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்
இயக்குநர் :- எம்.ஜானகிராமன். மூன்று நபர்களின் காதல் அனுபவங்களை வெவ்வேறு கால கட்டத்தில் நடந்ததை ஒரே பயணத்தில் இணைத்தும் அதற்கு இடையே உண்டான தொடர்புகளை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது அருமை.
இரயில் பயணத்தை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருப்பது அருமை.
ஒளிப்பதிவாளர் :- பாலு. இவரின் ஒளிப்பதிவு இரயில் பயணத்தையும் கதையின் பின்னணியும் பொருத்தமாக அமைந்துள்ளன. இயக்குநரின் எண்ணங்களை உள் வாங்கி தன்னுடைய வண்ண ஒளிப்பதிவால் பார்வையாளர்களை கட்டிப் போடுகிறார். அந்த அளவுக்கு கதையின் ஈர்ப்பு மக்களை கவர்ந்து இருக்கிறது.
இசை :- நிவாஸ் கே. பிரசன்னா. இவர் இசையில் உருவான பாடல்கள் காதல் தன்மைக்கு ஏற்ப அமைந்துள்ளன. பின்னணி இசைக் கோர்ப்பு படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது.
நிறையும் குறையும் :- திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். நிறை என்று சொன்னால் கதை அருமை . இயக்கம் அருமை .
டைட்டானிக் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் இதில் ஆய்வு செய்யும் போது கதையை தேர்ந்தெடுத்த இவர்கள் திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். படம் பார்க்கலாம் எங்களின் பத்திரிகை குழு நடுநிலையோடு நின்று ஆய்வு செய்து நல்லதொரு தீர்ப்பை வழங்கி பெருமைப் படுத்துகிறது. மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட், ராஜேஷ் ஓகே டேக்