

இம்மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரும் சிவாஜியின் திருவிளையாடல்
அருட்செல்வர் ஏபி நாகராஜன் இயக்கத்திலும் திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் இசையிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பிலும் 1965 ஆம் ஆண்டில் வெளியான திருவிளையாடல் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவித்தது
சிவாஜி கணேசன், முத்துராமன், டி எஸ் பாலையா, நாகேஷ், ஏபி நாகராஜன், சாவித்திரி, தேவிகா ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த தருமியாக நடித்த நாகேசுக்கும், சிவனாக நடித்த சிவாஜிக்கும் இடையேயான அந்த உரையாடல் காட்சி இன்று வரை மக்கள் மனதிலே நிற்கின்ற ஒன்று.
61 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைக்கு வர இருக்கும் திருவிளையாடல் படத்தினுடைய டிரைவர் வெளியீட்டு விழா நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த தினமான அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற புலிராம்போது அந்த விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்னுடைய பேரனும் சிவாஜி ராம்குமாரின் மகனுமான தர்ஷன் , சிவாஜியின் சகோதரர் வி.சி. சண்முகத்தினுடைய மகனான கிரி சண்முகம் உட்பட அவரது குடும்பத்தினரும், நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், இளவரசு, இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், கதாசிரியர் மற்றும் இயக்குனர் பூபதி ராஜா, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
லண்டனிலும், ஜெர்மனியிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பாக ஜி லதா வெளியிடுகிறார்
இம்மாதம் மாதம் 27ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது. சிவாஜி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தின் வெளியிட்டை ஒருங்கிணைக்கின்ற பணியை சிவாஜியின் தீவிர ரசிகரான பி வி முரளி செய்து வருகிறார்.
தொடர்ந்து மூன்று படங்களில் டாக்டர் வேடத்தில் நடிக்கும் சித்ரா லட்சுமணன் !
தமிழ்த் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வரும் சித்ரா லட்சுமணன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்,
தற்போது பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சபாநாயகராக நடித்த சித்ரா லட்சுமணன், விஷால் இயக்கத்தில் உருவான ‘மகுடம்’ திரைப்படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அப்பா குட்டி’ திரைப்படத்திலும், கே.பி.ஒய். பாலா கதாநாயகனாக நடிக்கும் ‘ரி மேட்ச்’ திரைப்படத்திலும் டாக்டர் வேடத்தில் இப்போது நடித்து வருகிறார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
இவை தவிர, இயக்குநர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘வாண வேடிக்கை’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சித்ரா லட்சுமணன் நடித்துள்ளார்.
இதற்கிடையே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரபுவும் நடிகை சுகன்யாவும் இணைந்து நடிக்கும் ‘மேரி கோல்ட்’ திரைப்படத்திலும் சித்ரா லட்சுமணன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். பிரியன் ராஜேந்திரன் இயக்கும் இப்படத்தில் அவர் ஊர்த் தலைவராக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் வடிவுக்கரசி, சிங்கம்புலி, பாரதி கண்ணன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ரக்சன் மற்றும் நம்ரதா ஆகியோர் காதல் ஜோடியாக நடிக்கின்றனர்.
‘மேரி கோல்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் 15 நாட்கள் நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் பிரபு, சுகன்யா, வடிவுக்கரசி, சிங்கம்புலி, பாரதி கண்ணன், விவேக் பிரசன்னா, ரக்சன், நம்ரதா உள்ளிட்ட நடிகர்களுடன் சித்ரா லட்சுமணனும் பங்கேற்று நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்துள்ள சித்ரா லட்சுமணன், ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.