புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

Share the post

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியை சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்!

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநரும் திரைப்படத்  தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பாட்டிக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டதை நேரில் பார்த்ததாகக் குறிப்பிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முடி இழப்பால் எதிர்கொள்ளும் சிரமங்களை தன்னால் உணர முடிவதாகவும், அவர்களுக்கு உதவும் வகையில் முடிதானம் செய்வது மிகவும் வரவேற்கத்தக்க செயல் என்றும் தெரிவித்தார்.

மேலும், சமூக வலைதளங்களை நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்வுகளை அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு தன்னால் முடிந்த ஆதரவையும் வழங்குவேன் என சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *