சிங்காரம்திரை விமர்சனம் :-

Share the post

சிங்காரம் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
்்்்்.்்…்்்்்்்்்்்்
கதைக் கரு :-
்்்்்்்்்்்்்
நரிக்குறவர் சமுதாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமே இப் படத்தின் கதைக் கரு.

கதையும் கதைப்போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சிங்காரம் பாசி மணி , ஊசி மணிகள் விற்றுத் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றார். முறையான சாதிச் சான்று இந்தச் சமுதாயத்திற்கு முறையாக அரசு வழங்குவதில்லை. அதற்குச் சரியானக் காரணம் அவர்கள் ஓரிடத்தில் நிரந்தரமாக இருப்பதில்லை. சொந்தமாக நிலமோ , நிரந்தரமாக குடியிருக்க சொந்த வீடுவோ இவர்களுக்கு இல்லை அதனால் இவர்களுக்கு அரசு அடையாள ஆவணங்கள் இல்லாததால் இவர்களுடைய சமூக மக்களுக்கு அடிப்படை நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற முடியாமல் தவித்து வருகின்றார் சிங்காரம்.

இந்நிலையில் சிங்காரத்தின் தந்தை எப்போதும் போல லாட்டரி டிக்கெட் வாங்குகிறார். ஏற்கனவே லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் உள்ளவர். ஒரு கட்டத்தில் இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பெருந் தொகை கிடைக்கிறது. அதன் பிறகு அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா ? அவர்கள் எங்கு போனார்கள் ? என்பதே மீதிக்கதை .

திரை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்் ்்.
சிங்காரம் வேடத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார். இவர் நகைச்சுவை நாயகனாக நடித்தவர் இந்தப் படத்தில் கதை நாயகனாக நடித்திருக்கிறார்.

யோகி பாபு மண்டேலா திரைப்படத்திற்கு பின்பு இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் நடித்து அசத்தி இருக்கின்றார். கதைக்கு உயிர் கொடுக்கும் கதாபாத்திரத்தின் மூலம் தன் நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து கதைக்கு பலத்தை சேர்த்திருப்பது பெருமை பட வேண்டிய விஷயம் தான்.

சிங்காரத்தின் தந்தை வேடத்தில் ( யோகிபாபுவின் தந்தை வேடத்தில் ) எம்.எஸ். பாஸ்கர் இவரை விட நடிப்பில் உயர்ந்து நிற்கின்றார். நடிப்பு அவர் இரத்தத்தில் ஊறிப்போனது. பின்னணி குரலில் பேசி அசத்தியிருப்பார்.எந்த வேடம் கொடுத்தாலும் அந்த வேடமாக மாறி விடுவார். இந்தப் படத்தில் நரிக்குறவர் பாஷையில் பேசி அசத்தியிருக்கிறார்.

அமரர் மாரிமுத்து மற்றும் திரைப்பட இயக்குநர் மனோபாலா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தனி முத்திரையப் பதித்திருப்பர்.

துணை நட்சத்திரங்கள் :-
மரியா வின்சென்ட் ,சார்ம்ஸ் , ஆர்த்தி கணேஷ் ,கல்கி , படவாகோபி, எஸ்.ஆர். தீபா சங்கர் , சபிதா ராய் ,ஜாவா சுந்தரேசன் , கே.எம்.கணேஷ்கர் நடித்திருக்கின்றனர். இன்னும் பலரும் இதில் நடித்து இருக்கின்றனர்.

படத்தின் நிறையும் குறையும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
படத்தின் மிகப் பெரிய பலமே கதைக்களம் தான். இந்தக் களத்தை யாரும் கையில் எடுக்கவில்லை. துணிந்து எடுத்து இருக்கும் இயக்குநருக்கு ஒரு பாராட்டு.

சமூகத்தில் இன்றுவரை நடந்து வரும் ஏற்றத் தாழ்வுகள் , அதுமட்டுமின்றி அடிப்படை உரிமைக் கூட கிடைக்காமல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை படத்தின் முதல் பாதியில் காட்டியிருப்பது நம் நெஞ்சைத் தொடுகிறது

படத்தின் குறை :-
்்்்்்்்்்்்்்்்்
படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் மனத்தைத் தொடவில்லை. திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தவில்லை.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் :- கே.வி.கதிர்வேலு :-
்்்்்்்்்்்்்்்்்்்
எழுதி இயக்கி இருக்கின்றார். இவர் கையில் எடுத்திருப்பது நரிக்குறவர் கதை. அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களோடு நெருங்கி பழகினால் அவர்களுடைய பழக்க வழக்கங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். நரிக்குறவரின் வாழ்வியலையும் , அரசியல் உரிமைப் போராட்டங்களையும் பற்றிப் பேசும் ஓர் எளிய கிராமத்து கதையாக இருந்தாலும் இதுவொரு கிராமத்து சமூகத் திரைப்படமாகவே அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு :-
்்்்்்்்்்்்்்
பிரசன்னா எஸ். இவர் கதைக்கு ஏற்ப தன் வண்ண ஒளிப்பதிவு மூலம் ஒளிப்பதிவு செய்து இயக்குநரின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து இருக்கின்றார்.

இசை :- சாம்.சி.எஸ்.
்்்்்்்்்்்்்்்்்்்்்
இவர் மெட்டில் உருவான பாடல்கள் அருமை . நெஞ்சைத் தொடுகின்றன. பின்னணி இசை படத்திற்கு தனி சிறப்பைத் தேடி தந்து இருக்கின்றது பாராட்டுக்குரியது பாராட்டோவோம். புதியவர்களை வரவேற்போம் ! பாராட்டுவோம் !

படத்தொகுப்பு :- லாரன்ஸ் கிஷோர்
்்்்்்்்்்்்்்்்்்்
ஒரு படத்தின் வெற்றித் தோல்வி எடிட்டர் கையில் தான் இருக்கிறது. அந்த வகையில் படத்தொகுப்பு அருமை பாராட்டுவோம்..

தயாரிப்பாளர்கள் :- ஏ.எஸ்.ரமண பாலாஜி , பத்மாவதி காந்தி
்்்்்்்்்்்்்்்்்்்்
இவர்கள் பணத்தை வாரி இறைக்கவில்லை என்றால் இப்படிப்பட்ட தரமான படத்தை இயக்குநர் தந்திருக்கமாட்டார். இவர்கள் கதை கேட்டதால் தான் ஒரு நல்ல தரமான படத்தை பார்வையாளர்கள் பார்க்க முடிந்தது.

கலை இயக்குநர் :- குருராஜ்.
சண்டைப் பயிற்சி :- ஃபேன்டம் பிரதீப்
மக்கள் தொடர்பு :- ரியாஸ் K.அஹ்மத் , பாரஸ் ரியாஸ்

சிங்காரம் என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தில் ஆய்வு செய்த போது யாரும் துணிந்து நரிக்குறவர் வாழ்வியலை படம்பிடித்துக் காட்ட துணிவில்லை. அதனை துணிந்து செயல் படுத்தி இருக்கின்றார். இயக்குநர் .படம் பார்க்கலாம் ஒரு சமூகத்தின் வாழ்வியலை நாமும் தெரிந்து கொள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை நமக்கு கொடுத்து இருக்கிறது. பாராட்டுவோம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தரமான திரைப்படத்தினை ஆய்வு செய்து நல்லதொரு தீர்ப்பினை வழங்கியுள்ளது பாராட்டுவோம். மீண்டும் சந்திப்போம். என்றும் தோழமையுடன் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *