டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது!

Share the post

டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது

‘ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘மின்னும் ஓர் இரவு’

நாகர்கோவிலில் பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை முன்னணி விளம்பரப் பட இயக்குநரான சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நவம்பர் மாதம் வெளியாகிறது. அஞ்சு கிருஷ்ணா அஷோக் நாயகியாக நடிக்க சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சிவபிரபு செல்வராஜ், “ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இரவுப் பொழுதை உற்சாகமாகக் கடக்க காட்டுப் பகுதிக்குள் செல்லும் நண்பர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்குகின்றனர். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதே கதை,” என்றார்.

‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்திற்கு சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை எஸ்.என். பாசில் கையாண்டுள்ளார். ஸ்டண்ட்: மிரட்டல் சிவா, கலை இயக்கம்: தேவராஜ், ஒப்பனை: சி. முத்து சுடலை, உடைகள்: கார்த்திக் தமிழ்வாணன், ஸ்டில்ஸ்: பாவிஷி பாலன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘மின்னும் ஓர் இரவு’ நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.


‘Minnum Oar Iravu’, a gripping crime thriller, to hit theatres in November

Produced by Dr. P. Robert Raj, directed by Sivaprabhu Selvaraj and starring Inigo Prabhakaran in the lead role, the story of ‘Minnum Oar Iravu’ unfolds over a single night

‘Minnum Oar Iravu’, produced by renowned Nagercoil-based doctor and entrepreneur Dr. P. Robert Raj under his banner, S.P. Robert Productions, is directed by Sivaprabhu Selvaraj, a leading commercial filmmaker known for his work in advertising films.

Starring Inigo Prabhakar in the lead role, ‘Minnum Oar Iravu’ is all set to release in theatres worldwide in November. Anju Krishna Ashok plays the female lead, while Subramaniam Siva, Sathya, Aruvi Bala, Udhaya, Yazer, Rajan, Aruvi Madhan and Pasupathi play pivotal roles in the film.

Speaking about the film, director Sivaprabhu Selvaraj said, “We have crafted ‘Minnum Oru Iravu’ as a gripping crime thriller that unfolds over the course of a single night. A group of friends venture into a forest area to spend an exciting night, only to find themselves caught up in a series of shocking incidents. Whether they manage to escape these circumstances forms the crux of the story.”

The film features cinematography by Sureshkumar Sundaram, with music composed by Pranav Sooraj. S.N. Fazil is in charge of editing. The team also includes stunt choreographer Mirattal Siva, art director Devaraj, makeup artist C. Muthu Sudalai, costume designer Karthick Tamilvaanan, still photographer Bavishe Balan, and publicist Nikil Murukan.

Produced by Dr. P. Robert Raj under the banner of S.P. Robert Productions and directed by Sivaprabhu Selvaraj, the gripping crime thriller ‘Minnum Oar Iravu’, starring Inigo Prabhakar in the lead role, will arrive in theatres worldwide in November.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *