கண்ணிமைக்கும் நேரத்துல காதல் கொண்டேனடி…கற்கண்டு நீ கையில் வந்தா கடிச்சி திம்பேனடி” என்று நான் எழுதி இசையமைத்த பாடலை கலாட்டா கணபதி என்ற படத்திற்காக பாடினார்.!

Share the post

“பாடகர் கிருஷ்ணராஜ்”…
மறைவெய்தியதைக் கேட்டு மனம் உடைந்தேன்…இவர் என்னிடம் பல பாடல்களை பாடியிருக்கின்றார்.
அதில் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும்,அப்டேட்டில் இன்னும் ரசிகர்களால் ரசிக்கப்படும் பாடலான “கண்ணிமைக்கும் நேரத்துல காதல் கொண்டேனடி…கற்கண்டு நீ கையில் வந்தா கடிச்சி திம்பேனடி” என்று நான் எழுதி இசையமைத்த பாடலை கலாட்டா கணபதி என்ற படத்திற்காக பாடினார்.

இவரின் சிறப்பு, வார்த்தைகள் தெளிவாக இருக்கும்.பாடகர்களில் ஸ்வர ஞானம் கொண்ட பாடகர்கள் ஒரு சிலரே உள்ளனர்.அதில் இவர் முதன்மையானவர்.
அதனால் தான் ஒரு சில இசையமைப்பாளர்களிடம் கண்டக்டராகவும் பணி புரிந்திருக்கின்றார்.அது இசையை முறையாக பயின்று ஸ்வர ஞானம் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.எனவே பொருளாதார நெருக்கடி நிலையில் இவர் பிறந்திருந்தாலும் இசையை முறையாக பயின்று எட்டாத உயரத்தை தொட்டவர்.

“கண்ணிமைக்கும் நேரத்துல காதல் கொண்டேனடி…கற்கண்டு நீ கையில் வந்தா கடிச்சி திம்பேனடி” என்ற பாடலைப் பாடி என் பாடலுக்கு சிறப்பு சேர்த்தார்.இன்று உலகம் முழுதும் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பாக இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.ஆனால்அவரின் ஒளி உடலில் இல்லை.

இசைக்கவிஞர்
செளந்தர்யன்
இசையமைப்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *