சட்டமும் நீதியும்2திரை விமர்சனம்!

Share the post

சட்டமும் நீதியும்2 என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :-
கொலையும் அதன் பின்னணியும் கொண்டது தான் இக் கதையின் கதைக் கரு.

சட்டமும் நீதியும் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :-
கொலையும் அதன் பின்னணியும் கொண்டது தான் இக் கதையின் கதைக் கரு.

கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து விடுகிறார். இந்தக் கொலைக்கு காரணம் நான்கு போலீஸ் அதிகாரிகள் தான் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்த நான்கு நபர்களை கைது செய்யப்படுகின்றனர். அந்த நான்கு போலீஸ் அதிகாரிகள் தாம் இந்தக் கொலையை செய்யவில்லை என உறுதியாக கூறுகின்றனர். இருப்பினும் சட்டம் தன் கடமையை செய்கிறது.

சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்ட இந்த நான்கு போலீஸ் அதிகாரிகளை மீட்டு எடுக்க களம் இறங்குகிறார் வழக்குரைஞர் சுந்தரமூர்த்தி. இவர் எளிமையானவர். சட்டத்தினை ஆய்ந்து தோய்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்.

இறந்து போன போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி சந்திரா மிக பிரபலமான வழக்குரைஞர்
. நடந்தது கொலை தான். அதுவும் அது திட்டமிட்டக் கொலை தான். அந்தக் கொலையை செய்தது அந்த போலீஸ் அதிகாரிகள் தான் என நம்புகிறார். கணவரைக் கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனையைப் பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கின்றார்.

எளிய வழக்குரைஞர் சுந்தர மூர்த்தி – பலம் பொருந்திய வழக்குரைஞர் சந்திரா . நீதி மன்றத்திற்கு வழக்கு வருகிறது. இருவரும் தத்தம் வாதங்களை நீதி முன் நிறுத்தி வாதாடுகிறார்கள். வழக்கு சூடு பிடிக்கிறது. நடந்தது கொலையா ? தற்கொலையா ? என்பது தான் கிளைமாக்ஸ். சட்டமும் நீதியும் யார் பக்கம் ? என்ற கேள்விக்கு விடை தருவது தான் இந்தக் கிளைமாக்ஸ்

திரை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
சுந்தரமூர்த்தி வேடத்தில் சரவணன். கடந்த சீஸனில் நோட்டரி பப்ளிக்காக இருந்து போராடியவர். இந்த சீஸனில் பெரிய அளவில் குற்றப் பின்னணி வழக்கை கையில் எடுத்துக் கொண்டு இந்த வழக்கை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய வேண்டிய வேலை. தான் எடுத்துக் கொண்ட வழக்கில் வெற்றிப் பெறுவதற்காக ஆதாராங்களைத் தோண்டி துருவி நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கின்றார். எதிர் தரப்பு வழக்குரைஞர் எத்தகைய திறமையாக வாதாடினாலும் அதனை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபணம் செய்ய முனைவதும் , கஷ்டமான சூழ்நிலையில் தான் வசித்தாலும் , மன உளைச்சலுக்கு ஆளானாலும் அதை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு தன் நடிப்பால் தனி முத்திரையைப் பதிக்கிறார் . பாராட்டுவோம்.

சந்திரா வேடத்தில் நடித்திருப்பவர் வரலட்சுமி சரத்குமார். தன் கணவனை கொன்றவர்களை பழி வாங்க எந்த எல்லைக்கும் போகலாம். ஆனால் அதற்கெல்லாம் அவருக்கு வாய்ப்பே இல்லை. கோபம் இருந்தாலும் சரி வெறி இருந்தாலும் சரி அதனைக் காட்டுவது நீதி மன்றத்தில் .நீதி மன்றத்தில் தனி மனுஷியாக காட்டாமல் எதுவாக இருந்தாலும் அதனை நீதி மன்றத்தில் வழக்குரைஞராக நின்று காட்ட வேண்டும்.கம்பீரம் குறையாமல் காட்டியிருக்கின்றார். பாராட்டலாம்

இன்ஸ்பெக்டர் வேடத்தில் பிரேம் நடித்திருக்கிறார்.

போலீஸ் என்றாலே மக்கள் மத்தியில் மோசமானவர்கள் என்ற முத்திரைக் குத்தப்பட்டு அதன்படி தான் அவர்களும் நடந்து கொள்கிறார்கள். கண்டிப்பு இல்லை என்றால் மக்கள் பயப்பட மாட்டார்கள். குற்றவாளிகள் குற்றங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள். சட்டம் வளையும் , நீதி சீர்குலையும்.

கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக ஷிவின் நடித்திருக்கிறார். தன் நடிப்பின் மூலம் கெத்து காட்டியிருக்கின்றார். மகனை விபத்து ஒன்றில் பறிக் கொடுத்த வேதனையை வெளிப்படுத்தும் விதம் பார்வையாளர்களின் கவனைத்தை ஈர்த்து தன் நடிப்பால் தனி முத்திரையைப் பதிக்கிறார்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக கல்லூரி வினோத் நடித்திருக்கிறார்.

சரவணனிடம் பயிற்சி பெறும் ஜூனியர் லாயராக லாவண்யா நடித்திருக்கிறார். தன் நடிப்பில் ஒரு துடிப்பு . கொடுத்த வேடத்தினை உணர்ந்து சரியாக நடித்து இருக்கிறார்.

இதில் பிரியங்கா ரோபோ சங்கர் , அபர்ணா சந்தர்ராமன் உள்ளிட்ட இன்ன பிறரின் பங்களிப்பு திரைக்கு ஒரு முத்தாய்ப்பாய் இருந்து மனத்திற்கு மன நிறைவைத் தருகிறது.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்்…
ஒளிப்பதிவு :- எஸ் .கோகுலகிருஷ்ணன். இவர் தன்னுடைய ஒளிப்பதிவை கையாளும் விதம் படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட். காரசாரமான வாதங்களை திரையில் காட்டிய விதமும் , கதை மாந்தர்களின் முக பாவனங்களை அடிக்கடி குளோசப்பில் காட்டி கதை மாந்தர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் மிக அருமை.

இசை :- விபின் பாஸ்கர். இவரின் பின்னணி இசை திரைக்கதைக்கு தேவையான விறுவிறுப்பைத் தருகிறது.

இயக்குநர் :- பாலாஜி செல்வராஜ். அருமையான கதையை தெரிவு செய்து தன்னுடைய திறமையான இயக்கத்தால் ஒரு தரமான படத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார்.இவரை நாமும் பாராட்டலாமே !
கொலை ஒன்றை கையில் எடுத்து அதன் பின்னணியுடன் கதையை கொண்டு செல்லும் விதம் மிக அருமை. கிரைம் திரில்லர் , ஹாரர் திரில்லர் , இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்று இறங்கினால் திரைக்கதையில் எப்படி வேண்டுமானாலும் பரபரப்பு என்னும் தீயை பற்ற வைக்கலாம் என்பதை இப் படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சட்டமும் நீதியும் என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தில் ஆய்வு செய்த போது தரமானபடம் இது. தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் சந்திப்போம் உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட்,ராஜேஷ் ஓகே டேக்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *