சென்னையில் ‘சினர்ஜி 2026’ தொழில் கண்காட்சி மற்றும் விருது விழாவை நடத்திய பிஎன்ஐ சென்னை சிபிடி பி !

Share the post

சென்னையில் ‘சினர்ஜி 2026’ தொழில் கண்காட்சி மற்றும் விருது விழாவை நடத்திய பிஎன்ஐ சென்னை சிபிடி பி

சென்னை, அக்டோபர் 17, 2026: பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (பிஎன்ஐ) அமைப்பின் சென்னை சிபிடி பி பிரிவு சார்பில், அதன் முக்கிய வணிகத் தொடர்பு நிகழ்வான ‘சினர்ஜி 2026’ தொழில் கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழா, சென்னை வர்த்தக மையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ. ஸ்ரீநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

“வணிகமும் வாய்ப்புகளும் சந்திக்கும் இடம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிஎன்ஐ அமைப்பின் 23 பிரிவுகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். 100-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளில் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டன. வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல், கூட்டுத் தொழில் வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் வணிகக் கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு இந்நிகழ்வு வாய்ப்பளித்தது. அறிவுப் பகிர்வு அமர்வுகளும், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுடனான வணிகத் தொடர்புகளும் நிகழ்வின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.

பிஎன்ஐ சென்னை சிபிடி பி பிரிவின் மண்டல இயக்குநரும், பிஎன்ஐ சென்னை தென் பிரிவின் செயல் இயக்குநருமான திரு. அஜீத் நஹார் கூறுகையில், “புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும், அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கவும், நீடித்த வணிகக் கூட்டாண்மைகளை ஏற்படுத்தவும் பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் தளமாக ‘சினர்ஜி 2026’ அமைந்துள்ளது. தொழில்முறைத் தொடர்புகளை நேரடியான வணிக வாய்ப்புகளாகவும், நிலையான வளர்ச்சியாகவும் மாற்றுவதே எங்களது நோக்கம்” என்றார்.

பிஎன்ஐ சென்னை சிபிடி பி மற்றும் தென் மண்டலத்தின் செயல் இயக்குநர் பட்டயக் கணக்காளர் சி.ஏ. சுனில் சேத்தியா கூறுகையில், “நம்பிக்கையின் அடிப்படையிலான உறவுகள் மற்றும் ‘கொடுத்து வெல்வோம்’ (Givers Gain®) என்ற கொள்கையின் மூலம் உறுப்பினர்கள் தங்களது வணிகத்தை வளர்த்துக்கொள்ள உதவுவதே பிஎன்ஐ அமைப்பின் நோக்கம். ஒத்துழைப்பை ஊக்குவித்தல், வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் நீண்டகால வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் தொழில்முனைவுச் சூழலை வலுப்படுத்த நாங்கள் முனைப்புடன் செயல்படுகிறோம்” என்றார்.

ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த தகவல்களின்படி, பிஎன்ஐ சென்னை சிபிடி பி மற்றும் தென் மண்டல வலையமைப்பில் உறுப்பினர்களுக்கிடையிலான வணிகப் பரிந்துரைகள் மூலம் ரூ.6,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான உறுதிப்படுத்தப்பட்ட வணிகம் உருவாகியுள்ளது. இது உறவுகளின் அடிப்படையிலான வணிகத் தொடர்புகளின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

1985-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடங்கப்பட்ட பிஎன்ஐ அமைப்பு, உலகம் முழுவதும் 77 நாடுகளில் 3,55,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 1,559 கிளைகளில் 75,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

‘சினர்ஜி 2026’ நிகழ்வின் மூலம், வணிக ஒத்துழைப்பு, தொழில்முனைவு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தனது உறுதிப்பாட்டை பிஎன்ஐ சென்னை சிபிடி பி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *