
ஜெயிலர் – 2 என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :-
கொலை ஒன்று நடக்கிறது ? அந்தக் கொலையை செய்தது யார் ? ஏன் கொலை செய்ய வேண்டும் ? சிலைக் கடத்தல். கடத்தியது யார் ?
கதையும் கதையின் போக்கும் :-
ஜெயிலர் – 2 என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :- சிலைக் கடத்தல். கடத்தியது யார்? ஏன் கடத்த வேண்டும் ?
கதையும் கதையின் போக்கும் :-
வர்மனை கொன்றது யார் ? கடத்தப்பட்ட சிலைகள் கொண்ட கண்டெய்னர்கள் யாரிடம் உள்ளது ? என்ற கேள்விக்கு விடை தேட முயற்சி செய்யும் போது கிடைப்பது கல்பக் குடும்பத்தினர் ( எஸ்.ஜே.சூரியா , வித்யா பாலன் , மிதுன் சக்ரவர்த்தி ) வர்மனின் நண்பன் திலீப் ( சுராஜ்) மூலம் தேடுகின்றனர்.
இவர்களின் தேடல் ஒரு பக்கம் நடக்கிறது. தன்னைச் சுற்றியும் தன் குடும்பத்தை சுற்றியும் ஏதோ தவறு நடப்பதாக டைகர் முத்து வேல் பாண்டியன் உணருகின்றார்.
தன்னை தேடுபவர்கள் தன் குடும்பத்தை நெருங்குவதற்கு முன் தாம் அவர்களை நெருங்க வேண்டும் என டைகர் முத்து வேல் பாண்டியன் திட்டமிடுகிறார்.
டைகர் முத்துவேல் பாண்டியன் தான் தீட்டிய திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க , ஒரு கட்டத்தில் திலீப் இடத்திற்கே சென்று விடுகிறார். திலீப்பை வைத்து கல்பக் குடும்பத்தைக் கண்டு பிடித்து அந்த நெட்வொர்க்கில் இருக்கும் அனைவரையும் பிடிக்க வேண்டும் . சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என முடிவு செய்கிறார்.
டைகர் முத்துவேல் பாண்டியன் நெருங்கு வதற்குள் திலீப்பின் குடும்பத்தை எஸ்.ஜே. சூரியா கடத்தி விடுகிறார். இப்படிப்பட்ட சூழலில் ஏற்பட்டிருக்கும் சிக்கலால் தமிழ் நாட்டிலிருந்து கோவாவிற்கு கல்பக் குடும்பம் இருக்கும் இடத்திற்கு டைகர் முத்துவேல் பாண்டியன் செல்கிறார்.திலீப்பின் குடும்பத்தை டைகர் முத்துவேல் காப்பாற்றினாரா ? இந்தச் சிக்கலில் இருந்து தப்பிவிட்டாரா ? ஒட்டு மொத்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தாரா ? இல்லையா ? இவர் சந்தித்த சவால்கள் எத்தனை ? அத்தனையும் முறியடித்தாரா ? இல்லையா ? என்பது தான் மீதிக் கதை .
ஜெயிலர் – 1 ஐ கொஞ்சம் திருப்பி பார்ப்போம். சிலைக் கடத்தலில் ஈடுபட்டு வரும் வர்மன் ஓய்வு பெற்ற ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியனின் மகனும் போலீஸ் அதிகாரியுமான அர்ஜூனை கடத்தி வர்மா கொலை செய்து விடுகிறார். தன் மகனின் இறப்புக்கு காரணமானவர்களை பழி வாங்க வேண்டும் என டைகர் முத்து வேல் பாண்டியன் துடிக்கிறார். அதுமட்டுமல்ல வர்மனுக்கு சாவு பயம் என்றால் என்னவென்று காட்டுகிறார்.
ஜெயிலர் – 2 இல் அர்ஜூன் சாகவில்லை. உயிரோடு இருக்கின்றார். அவர் திரும்ப கிடைக்க வேண்டுமென்றால் ஆந்திராவில் உள்ள பழைய புராதன கிரீடத்தைக் கவர்ந்து வந்து கொடு என டைகர் முத்துவேல் பாண்டியிடம் வர்மன் கேட்கிறார். தன் மகனுக்காக தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அந்தக் கிரீடத்தை எடுக்க டைகர் முத்துவேல் பாண்டியன் முயற்சி செய்கிறார். என நாம் நினைத்தால் வர்மனைத் தூக்க ஸ்கெட்ச் போட்டு தூக்க நினைத்தவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது.தன் மகன் இறந்து போய்விட்டதாக நினைத்துக் கொண்டிருக்க வர்மனுடன் கூட்டுச் சேர்ந்து கூட்டு களவாணி வேலை செய்வதைக் கண்டு தெரிந்து கொள்கிறார் டைகர் முத்துவேல் பாண்டியன்.
இறுதியாக வர்மனின் கதையை முடித்து விடுகிறார் டைகர் முத்துவேல் பாண்டியன். தப்பு செய்த தன் மகனை போலீஸில் சரண்டையச் சொல்கிறார் டைகர் முத்துவேல் பாண்டியன். சரண் அடைய மறுக்கிறார் அர்ஜூன். வேறு வழியில்லாமல் தன் மகனையே கொன்று விடுகிறார் டைகர் முத்துவேல் பாண்டியன்.
திரை நட்சத்திரங்கள் :-
டைகர் முத்துவேல் பாண்டியன் வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் . நடித்திருக்கிறார் இல்லை இல்லை கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார். பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தன் கடமையிலிருந்து ஓய்வு பெறவில்லை.
திரை நட்சத்திரங்கள் :-
டைகர் முத்துவேல் பாண்டியன் வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடித்திருக்கிறார். இல்லை இல்லை அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் தன் கடமையிலிருந்து ஓய்வு பெறவில்லை.
பணிவாக பேசுவது , கண் பார்வையில் வழக்கம் போல மாஸ் காட்டுவது … ஸ்டைல் … வசனங்களை அவர் பாணியில் பேசி பார்வையாளர்களை கை தட்ட வைப்பது. ஆக்ஷன், எமோஷனல் காட்சிகள் அனைத்திலும் சூப்பர் ஸ்டார் வேற லெவல். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளில் தனது கண்களால் வலிய திரையில் காட்டி யிருப்பார். அது தனி சிறப்பு தான். படத்திற்கு படம் தன் தனித் திறமையை வெளிப்படுத்துவதில் தயங்குவதே இல்லை.
வில்லனாக வர்மன் வேடத்தில் நடித்திருக்கும் சூரஜ் நடித்திருக்கிறார். வர்மன் இறக்கும் போது பேசும் வசனம் இன்னமும் நம் காதில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. அது என்ன வசனம் நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. ” இது பெரிய மிகப் பெரிய நெட்வொர்க் , என்னை கொலை செய்துட்டு உன்னாலே நிம்மதியா இருக்க முடியாது…. என் பின்னாலே ஒரு உலகமே இருக்கு ஜெயிலர்” வர்மன் , டைகர் முத்துவேல் பாண்டியனிடம் சொல்லுவார் .டைகர் முத்துவேல் பாண்டியன் எங்கு விட்டாரோ அங்கிருந்தே ஜெயிலர் – 2 கதை ஆரம்பமாகிறது.
சூரஜ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கன கச்சிதமாக செய்துள்ளார்.
துணை நட்சத்திரங்கள் :-
எஸ்.ஜே. சூரியா இதில் நடித்திருக்கிறார். இன்னும் இவர் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கலாம். இருந்தாலும் நடிப்பில் இவர் அரக்கன். அரக்கன் தான்.
வித்யா பாலன் :- இவர் நடிப்பு அருமை. கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார். சூப்பர் ஸ்டாருக்கு எதிராகவும் திமிராகவும் பேசும் தோரணை வெகு சிறப்பு.
நகைச்சுவை கூட்டணி :-
நமோ நாராயணன் , யோகி பாபு , ரஜினிகாந்த் காம்போவில் வந்த நகைச்சுவை காட்சிகள் சூப்பர். அதிலும் நமோ நாராயணன் வேற லெவல் . மற்ற நடிகர்களும் தமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து படத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றனர் .
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் :- நெல்சன் திலீப் குமார் இப் படத்தை இயக்கி இருக்கிறார். ஜெயிலர் – 1 மற்றும் ஜெயிலர் – 2 இந்த இரண்டு படத்தையும் தொடராக இணைத்து சரியாக செய்து இருக்கின்றார். அதுவே இந்தப் படத்திற்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.
கதை எடுத்துக் கொண்டு காட்சிகளை உருவாக்கி , கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தெரிவு செய்து நமக்கு அழகாக காட்டிய விதம் , டார்க் ஹ்யூமர் காட்சிகள் , மாஸான கேமியோக்கள் என திரைக்கதையை நன்றாக வடிவமைத்துள்ளார்.
முதல் பாதியின் fun + மாஸ் = எண்டர்டெயின்மெண்ட் என படத்தை கொண்டு சென்ற விதம் சிறப்பு. இரண்டாம் பாதியில் ஆக்ஷன் + எமோஷனல் டிராமாவாக எடுத்துச் சென்ற விதம் வேற லெவல் .
ஒளிப்பதிவு :- விஜய் கார்த்திக் கண்ணன். இயக்குநரின் எண்ணங்களை திரையில் கொண்டு சேர்த்தவர்.
இசை :- அனிருத். இசையில் உருவான பாடல்கள் அருமை. பின்னணி இசை கதைக்கு தனி கீர்த்தனை .
திரை நட்சத்திரங்கள் :- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , எஸ்.ஜே. சூரியா , மிதுன் சக்ரவர்த்தி , சூரஜ் வெஞ்சாரமூடு , வித்யா பாலன் , ரம்யாகிருஷ்ணன் , யோகிபாபு , மிர்னா , மாஸ்டர் ரித்விக் , ஜதின் சர்னா , நமோ நாராயணன் , பிஜோர்ன் சுர்ராவ் , அன்னா ராஜன் , பி.எல்.தேனப்பன் , ஜாபர் சாதிக் , பதம் குமார் , அபேக்ஷா போர்வால்
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-:
தயாரிப்பு நிறுவனம் :- சன் பிக்சர்ஸ்.
கதை திரைக்கதை இயக்கம் :- நெல்சன் திலீப் குமார்
ஒளிப்பதிவு :- விஜய் கார்த்திக் கண்ணன்
படத் தொகுப்பு :- ஆர். நிர்மல்
கலை :- டி.ஆர்.கே. கிரண்
சண்டைப் பயிற்சி :- சேத்தன் டி சோசா
மக்கள் தொடர்பு :- ரியாஸ் k.அஹ்மத், பாரஸ் ரியாஸ்
இசை :- அனிருத்
ஜெயிலர் – 2 என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஆய்வு செய்த போது நமக்கு தெரிய வருவது சூப்பர் ஸ்டார் கதையை கேட்கிறார். பிடித்தபடி நடித்து இயக்குநரின் எண்ணங்களை திரைக்கு கொண்டு வருகிறார். தன் நடிப்பால். சின்ன சின்ன வேடங்களை ஏற்று நடித்த சூப்பர் ஸ்டாருக்கு ஓர் அங்கீகாரம் கொடுத்தது இந்த தமிழக இரசிகர்கள் தான். வயதனாலும் படத்தை விட்டு ஒதுங்காமல் இன்றும் நடித்து வருவது யாராலே ? இரசிகர் கூட்டத்தாலே ! பார்க்க வேண்டிய படம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி பாராட்டுகிறது. மீண்டும் இன்னொரு திரை விமர்சனத்தில் சந்திப்போம் . அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்
