பருந்துதிரை விமர்சனம் :-

Share the post

பருந்து என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :-
காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல் சாதல் ! மகாகவி பாரதியின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. இளம் வயது காதலர்கள் மனம் ஒன்றி ஓடி மறைந்து வாழும் கதையே இப் படத்தின் கதைக் கரு .

கதையும் கதையின் போக்கும் :-
பள்ளிப் பருவக் காதல் . இந்தக் காதல் சாதி மதம் இனம் அறியாக் காதல் ! உள்ளத்தால் இணைந்த இரு இதயங்கள் ! உடலால் இணைந்து இல்லற வாழ்வில் திளைத்து ! எதைப் பற்றியும் கவலைப் படாத இரு உள்ளங்களின் சங்கமம் தான் ” பருந்து ” என்னும் திரைப்படத்தின் மையக் கருத்து.

உமாவின் அக்காவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பற்றி வெளியில் தெரிந்தால் தன்னுடைய மூத்த மகளின் திருமணம் நின்று விடும் . நிற்பதோடு மட்டுமல்லாமல் , மானம் அவமானம் இரண்டும் போட்டிப் போட்டுக் கொண்டு பெண்ணைப் பெற்றவனின் இதயத்தை சுக்கு நூறாக உடைக்கும் . வேதனை எரிமலையாக வெடிக்கும். என்ன செய்வது பின்னாடி வருவதைப்பற்றி கவலைப்படாமல் பருவக் கோளாறால் ஏற்பட்ட இந்த நிகழ்வு எங்கு கொண்டு போய் முடிகிறது பார்த்தீர்களா ? இரயிலில் பயணம் செய்யும் போது இளங் காதலர்கள் ஒருவர் மடியில் ஒருவர் சாய்வதும் , கரம் கோர்த்து தலை சாய்வதும் ச்சே ச்சே ! இது எல்லாம் ஒரு பிழைப்பா ? எனக் கேட்கத் தோணும்.

உமாவின் அக்காவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பற்றி வெளியில் தெரிந்தால் தன்னுடைய மூத்த மகளின் திருமணம் நின்று விடும் . நிற்பதோடு மட்டுமல்லாமல் , மானம் அவமானம் இரண்டும் போட்டிப் போட்டுக் கொண்டு பெண்ணைப் பெற்றவனின் இதயத்தை சுக்கு நூறாக உடைக்கும் . வேதனை எரிமலையாக வெடிக்கும். என்ன செய்வது பின்னாடி வருவதைப்பற்றி கவலைப்படாமல் பருவக் கோளாறால் ஏற்பட்ட இந்த நிகழ்வு எங்கு கொண்டு போய் முடிகிறது பார்த்தீர்களா ? இரயிலில் பயணம் செய்யும் போது இளங் காதலர்கள் ஒருவர் மடியில் ஒருவர் சாய்வதும் , கரம் கோர்த்து தலை சாய்வதும் ச்சே ச்சே ! இது எல்லாம் ஒரு பிழைப்பா ? எனக் கேட்கத் தோணும்.

அறியாத வயதில் தெரியாமல் செய்யும் தப்பு பெண்ணைப் பெற்றவர்களுக்கு எந்த அளவு மனத்தை பாதிக்கும் தெரியுமா ? தன்னுடைய இளையமகள் உமா கார் ஓட்டுநரோடு ஓடிப்போனது அவருக்கு அவமானமாக இருந்தாலும் இளைய மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் பரிதவிக்கிறார் உமாவின் தந்தை மாரிமுத்து .

மாரிமுத்துவின் நண்பரும் ஊர்த் தலைவருமான அழகுமலைக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்கிறார்.

அழகுமலையும் விநாயக் என்பவரும் சேர்ந்து ஓடிப்போன உமாவையும் மூர்த்தியையும் தேடிக் கண்டுபிடிக்க முனைகின்றனர். அவர்கள் ஓடிப்போன ஜோடிகளை கண்டு பிடித்தார்களா ? இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டார்களா ? என்பது தான் இந்தக் கதை .

திரை நட்சத்திரங்கள் :-
இளம் ஜோடிகளாக நடித்திருக்கும் உமா மற்றும் மூர்த்தி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இளம் வயது காதலர்களையும் , அவர்களது பிரச்சினை களையும் மிக சரியான முறையில் பிரதிபலித்திருக்கிறார்கள்.

முக்கியமான கதாபாத்திரத்தில் ஊர் தலைவராக நடித்திருக்கிறார் அழகுமலை. இவர் உணர்ச்சிகரமான நடிப்பின் மூலம் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்.

அழகுமலையின் வலது கரமாக செயல்படும் விநாயக் ஆக்‌ஷனில் அமர்க்களப்படுத்தி இருக்கின்றார்.

துணை நட்சத்திரங்கள் :-
மன்சூர் அலிகான் , பேரரசு , அப்புக்குட்டி , செண்ட்ராயன் , மாரிமுத்து , சர்மிளா என அனைத்து நட்சத்திரங்களும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பால் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இசை :- ஜேம்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசை கதைக்கு பக்கபலமாக இருக்கிறது.

படத்தொகுப்பு :- ஜெயகிருஷ்ணா.
இப்படத்தின் படத்தொகுப்பு விறுவிறுப்பாகவும் காட்சிகள் வேகமாகவும் போக உதவியாக இருக்கிறது இந்தப் படத் தொகுப்பு.

எழுத்து இயக்கம் நடிப்பு :- அழகுமலை .
கிராமங்களில் எதார்த்தமாக நடக்கும் சம்பவங்களை காட்சிகளை வடிவமைத்து இரசிக்க வைத்திருக்கிறார். அறியாத வயதில் வரும் காதல் எப்படி குடும்பத்தை பாதிக்கிறது என்பதை படம்பிடித்து காட்டிருக்கின்றார்.

வியாபார உத்தி இருந்தாலும் சமூக அக்கறையுடன் திரைக்கதை எழுதி காட்சிகளை வரிசைப்படுத்தி நல்ல விதமாக படத்தை இயக்கி இருக்கின்றார் அழகுமலை

பருந்து ” என்னும் திரைப்படம் யதார்த்தத்தை அப்பட்டமாக சொல்லியிருப்பது பெண்ணைப் பெற்றவர்களுக்கு அபாய சங்கு ஊதுவதைப் போல இருக்கிறது. நாட்டு நடப்பை படம் பிடித்து காட்டப்பட்டிருக்கிறது இந்தப் படம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக இருந்து நல்லதொரு தீர்ப்பை வழங்கி உள்ளது. மீண்டும் சந்திப்போம் உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *